பக்கம்:உத்தரகாண்டம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254   ✲   உத்தரகாண்டம்

வாயில் மணியை அடிக்கிறாள். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்காக வாயிலில் ஒரு குழாய் இருப்பதை அவள் பார்க்கிறாள். திருகுகிறாள். தண்ணீர் வருகிறது. கால்களைக் கழுவிக் கொள்கிறாள். கதவை உச்சியில் கைக்குட்டை போன்ற ஒன்றால் முடியைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிங் பையன் திறக்கிறான். ஐந்து வயசு ஆறு வயசு மதிக்கத் தகுந்த ஒரு பெண், பையன் இருவரும் தாயின் மீது கோபம் காட்டும் படி இந்தியில் பேசிய படி அவளுடைய சேலையைப் பற்றிக் கொள்கிறார்கள். “உள்ள வாங்க தாதிமா! நிகில், நித்யா, தாதிமாக்கு பிரணாம் பண்ணுங்க!...”

“அட கண்ணுகளா?” என்று குழந்தைகளைத் தழுவி முத்தமிட்டுக் கொள்கிறாள். மட்டியாக, வெறுங்கையுடன் வந்திருக்கிறாளே?... அடாடா, ஏம்மா, இங்கே பக்கத்தில கடை ஏதானும் இருக்கா? நீ கூப்பிட்ட, உடனே ஓடி வந்திட்டேன்...”

“இங்க பக்கத்தில காலேஜ் காம்பஸில இருக்கு...”

“அப்ப, நீ வழிகாட்டுறியா போயி மிட்டாய் வாங்கிட்டு வாரேன்...”

“நோ, தாதிமா, நானே சைகிள்ள போயி வாங்கிட்டு வாரேன். என்ன வாங்கட்டும், கேக், மிட்டாய்...”

“எதுனாலும் வாங்கிட்டு வா தம்பி” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். அதற்குள் அநு, அவளைப் பற்றிக் கொண்டு, முன்னறைக்கு வந்து விடுகிறாள்.

“அம்மா என்ன இது....?”

“தாயம்மா...”

அவள் தாவிப் பற்றிக் கொள்கிறாள்.

அநும்மா...!

அடர்ந்து கறுத்த முடி, நரைத்து முன்புறம் மண்டை தெரிய, முகம் முழுதும் வாழ்க்கையின் அதிர்வுகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/256&oldid=1050282" இலிருந்து மீள்விக்கப்பட்டது