பக்கம்:உத்தரகாண்டம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256   ✲   உத்தரகாண்டம்


“எனக்கு...! எனக்கு...!”

“தாதிமாக்கு!”

அவள் வாங்கிக் கொள்கிறாள்.

பையில் ஒரு பெட்டியில் இருவகை கேக்குகள் - ஆறு - ஆறு என்று பன்னிரண்டு இருக்கின்றன. ஒன்றை எடுத்து அவள் பெண் குழந்தையிடம் - நித்யா - வாயைக் காட்டுகிறது, அவள் ஊட்டுவது போல் கொடுக்க, பற்றிக் கொள்கிறது. பிறகு பையனுக்கு... இந்தா தம்பி - உன்பேர் அமாரா?... அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா?” என்று கூப்பிட்டு அவளுக்கு ஒன்றைக் கொடுக்கிறாள். அவளும் வாயில் வாங்கிக் கொள்கிறாள். பிறகு இன்னொரு துண்டை அநுவின் வாயில் வைக்க, அநு கண்ணீருடன் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு துண்டை அவளுக்கு ஊட்டுகிறாள்.

ஆண்டவனே! நீ இத்தனை கருணையுள்ளவனா? இந்தச் சின்னச்சின்ன செய்கைகளில், இவ்வளவு மனநிறைவு கிடைக்குமா?

“இந்தப் புள்ள யாருன்னு சொன்னம்மா?...”

“பக்கத்து இன்ஜீனியரிங் காலேஜ் இல்ல; அதுல புரொபசரா இருக்காரு. இவங்க மாமா கிரணோட நெருங்கிய சிநேகிதர். ஏர்ஃபோர்ஸில் இருந்தார்... அவர் மூலமாத்தான், இந்த இடமே எனக்கு செய்து குடுத்தாங்க..”

“அப்படியா? இவுங்க எத்தினி நாளா இங்க இருக்காங்க?”

“இருக்கும் எனக்கே தெரியாது. பத்து வருசமிருக்கும்னு நினைக்கிறேன். தாயம்மா...?”

குரல் உடைந்து கண்ணீர் வழிகிறது.

“கடைசில ஒரு தீச்சொல்லைச் சொல்லி... நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன். நானே... நானே...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/258&oldid=1050285" இலிருந்து மீள்விக்கப்பட்டது