பக்கம்:உத்தரகாண்டம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260   ✲   உத்தரகாண்டம்


“மக்க மனிசா இருக்காங்களா?”

“இருக்காங்க... அந்தச் சிரிப்பில் எதுவுமே தெரியவில்லை. பழகுபவரிடம் அந்தச் சிரிப்பே ஒட்டிக்கொண்டது.”

“சித்தி அவரைக் கல்யாணம் பண்ணின்ட பிறகு, என்னை ஆயாவிடம் விட்டுவிட்டு அவளும் அப்பாவுடன் வெளியே போவாள். அப்பதான் மாமா என்னை நாக்பூருக்குக் கூட்டி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தங்கவில்லை. அவர் அங்கே ‘இங்கிலீஷ்’ ஹைஸ்கூலில் டீச்சராக இருந்தார். மாமியும் சரஸ்வதி வித்யாலயத்தில், பிறகு, எனக்குப் பத்து வயசான பின் வேலை செய்தார். கிரண் குடும்பம் ஒரு வகையில் மாமிக்கு உறவுதான். கிரண் அப்பா பண்டாரா கார்டைட் ஃபாக்டரியில் வேலையாக இருந்தார். கிரண் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தான். என் தம்பிகள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் படிப்பு முடித்து, லிட்டரேச்சர் எம்.ஏ. பண்ணினேன். டெல்லியிலேயே பப்ளிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப, அப்பாவுக்குக் குடியினால், உடம்பு கெட்டுவிட்டது. பி.பி., ஷூகர்... ஏறி, ஒருதரம் ‘மைல்ட்’ அட்டாக்கும் வந்ததால், சித்தி ரொம்பக் கட்டுபாட்டில் வைத்திருந்தாள். அதோடு, பக்தி மஞ்சரியாகி விட்டாள். பெரிய மனிதர் வீட்டு, மேம் சாப்கள், பஜனை செய்வார்கள். ‘கிட்டி பார்ட்டி’ சீட்டாட்டம், இதெல்லாம் தலைநகர் நாகரிகம். கிரண் அப்போது டெல்லியில் இருந்தான். சாதாரணமான பழக்கம், அவனை, சித்தியின் பஜனைக் குழுவில் ஒருத்தனாக அடிக்கடி ஞாயிறு பஜனைகளில் வரச் செய்தது. நல்ல குரல். தமிழ், ஹிந்தி, வெஸ்டர்ன் என்று பாடுவான். எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நாக்பூர் வாழ்க்கை, எளிய நூல் சேலை வாழ்க்கை. அது ஒரு ‘மிடில் கிளாஸ்’, சாதாரண, பந்தா இல்லாத மனிதர் கொண்டது, எனக்கு அது பிடித்திருந்தது. ஞாயிறென்றால் கிரண் காலையிலேயே வருவான். நாங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/262&oldid=1050291" இலிருந்து மீள்விக்கப்பட்டது