பக்கம்:உத்தரகாண்டம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    261

கலை இலக்கியம், சினிமா என்று பேசுவோம். ‘பிடிச்சிப் போச்சு, கல்யாணம் பண்ணிடுவோம்’னு தீர்மானித்து, டெல்லியிலேயே நடத்திவிட்டார்கள். அப்ப என் தாத்தா கூட இருந்தார். ஆறுமாசம் கழிச்சுத்தான் செத்துப்போனார்.

“ஆனால், அவருடன் டெல்லி குவார்ட்டர்ஸில் குடித்தனம் பண்ணப்போன பிறகுதான், அந்த வாழ்க்கை புரிந்தது.”

“என்ன சொல்ல தாயம்மா! சாயங்காலம்னு ஒண்ணு வரதே, கிளப்புக்குப் போகத்தான்... என்னைப் போலிருந்த மனைவிகளும் போவார்கள். பார்ட்டி... குடி, கூத்து...

“முதல் நாள் ‘திருமண பார்ட்டி’ கொண்டாட்டமே எனக்கு வெறுப்பாகிவிட்டது. ‘என்னை ஏமாத்திட்டீங்க! சீட், ரோக்’ன்னெல்லாம் கத்தினேன். அழுதேன். வீட்டுக்கு வந்து சித்தியிடமும் அப்பாவிடமும் சண்டை போட்டேன். ‘ரிலாக்ஸ், அது, ராணுவம் கட்டுப்பாடான வாழ்க்கை. பார்டர் ஏரியாவில், அவர்கள் இந்த நாட்டைக் காக்கிறார்கள். உத்தமமான பணி. கிரண் நல்ல பையன். நீ அவனோடு இருந்து மாற்றலாம். எதோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வது உள்ளதுதான்...”

கிரண் அன்றே வந்து, அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான். அப்படியும் இப்படியுமாகச் சில மாசங்கள்...

கர்ப்பமானாள். அப்போது பங்களாதேஷ் நெருக்கடி. இவளுக்கு சித்தி வளை காப்பு செய்தாள். பட்டு சரிகை, நகை, எதுவும் இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே ராம்ஜி மாமா குடும்பம் அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய வளைகாப்பு சமயத்தில் அவர் டெல்லி வந்திருந்தார். சித்தி திட்டினாள். “காது மூக்குன்னு ஒரு நகை இல்லை. அந்த காலத்துலதான் கதர் கட்டிண்டு அழுமூஞ்சி மாதிரி இருந்தே, இந்தப் பட்டெல்லாம் நம் நாட்டுதுதானே? காது வளையத்தைக் கழற்றி எறி. உன் அம்மாவின் தோடு, நகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/263&oldid=1050293" இலிருந்து மீள்விக்கப்பட்டது