பக்கம்:உத்தரகாண்டம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    265

கச்சடான்னுதான் அர்த்தம். இங்க சென்னை பாஷையில, எல்லாம் இருக்கு. “டாப் கயன்டுபூடும், வெத்ல பேட்டுக்குவ... தெரிமா...!” என்று சொல்லி ரசித்துச் சிரிக்கிறான்.

“அதெல்லாம் வாணாம் சிங்கு, எனக்கு இத்தினி நாள் நீங்க இங்க இருக்கிறதே தெரில... இங்க ஏரி இருந்திச்சி. ஏரிவரையிலும் கூட வருவேன். இந்த வூடு இடிக்கிற சனங்கள்ளாம் அங்கங்க கீத்து மரச்சிட்டு குடி இருக்கும்.”

நாற்றம் வந்து விட்டது. முகத்தை மூடிக் கொண்டு நடக்கிறார்கள்.

ஆட்டோ. இரண்டு சக்கர வண்டிகள் போகின்றன. ஒரு பாரவண்டி பளீரென்று ஒளி காட்டி வருகிறது...

“சிங்கு, நீங்க எங்க கடவீதிக்கா வரீங்க? நீங்க பைக்குல போவீங்கல்ல? நடந்து வாரீங்க?”

“உங்களுக்காகத்தா வாரேன், மாதாஜி. உங்ககிட்டப் பேசணும்னு...”

“அப்பிடியா! அநும்மா பத்தித்தான பேசப் போறீங்க? எனக்கு அங்க ஒண்ணும் சரில்ல, சிங்கு. கடசி காலத்துல இவங்களுக்குத் துணையா இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டிருக்கிறன். அவுங்க இன்னைக்கு மரத்த வெட்டுறானுக. நாளைக்கே கடப்பாரைய எடுத்திட்டு வீட்ட இடிக்க வரமாட்டானுவன்னு என்ன நிச்சியம்...? ஆமா, சிங்கு, நிசாப் பொண்ணு புருசன் எங்கே இருக்காரு, இப்பல்லாம் துபாய், சவுதின்னு பணம் சம்பாதிக்கப் போறாங்க, அப்படியா?...”

“அதைச் சொல்லதா வந்தேன். மாதாஜி. அநுகிட்ட எதும் கேட்காதீங்க. மனசு சரியில்லாம ஒரு மாதிரி இருந்து இப்பதா நல்லாயிருக்காங்க. தேவா போனபோது, அவங்க அங்கிளுக்கு நாங்க சேதி அனுப்பினோம். அநுவோட பிரதர்ஸ் ரெண்டு பேரும், யு.எஸ். போயிட்டாங்க. அவங்க சித்தியும் டில்லில இல்ல. கருணானந்த சாமியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/267&oldid=1050302" இலிருந்து மீள்விக்கப்பட்டது