பக்கம்:உத்தரகாண்டம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    267

எங்கோ, ‘எய்ட்ஸ்’ குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பு ஹோம் இருக்குன்னு போயிட்டு வந்தா. அப்பதா உங்களப் பார்க்கச் சொல்லி நான் அனுப்பினேன்...”

வீடு வருகிறார்கள். சிங்கும் வருகிறார்.

“ஏம்மா, காலம போனவங்க... எங்க போறீங்க, யாரு வராங்கன்னு புரியல. வூட்டுக்கு வூடு தீவிரவாதி ஒளிஞ்சிட்டிருக்கிறானான்னு தேடுறாங்க. அன்னைக்கு ஓராளக் கூட்டிட்டு வந்து குசுகுசுன்னு பேசிட்டிருந்தீங்க. சோறு பண்ணிப் போட்டீங்க. அவரு பைய எடுத்திட்டுப் போனாரு. ஆரைத் தேடிட்டு வந்தாரு, எதுக்கு வந்தாருன்னு புரியல. இப்ப இந்த ஆளு ஆரு?...”

சிங்கு பார்க்கிறார். “க்யாஜி? என்னத் தெரியல? பொத்துரி காலேஜில இருக்கிறேன். தேவா சாப் இருக்கிறப் பஜனைக்கு வந்திருக்கிறேன். புரியல?... நா தீவிரவாதி இல்லப்பா?...”

“இல்ல... இல்ல சாரு, ரொம்ப நாளாயிட்டுதா? அதாகப் போகுது பத்து வருசம். வந்திட்டுப் போயிட்டு இருந்தாதான் புரியும்? ஒரு பொண்ணு வந்திச்சி. அதும் ஆருன்னு தெரியல...”

“இது பாரு ரங்கா, அது யாரும் இல்ல. உங்க சேர்மன் அய்யா கிட்ட சொல்லு. அன்னிக்கு வந்தது, சுப்பய்யா. இங்க இருந்த அய்யாவின் தொண்டர். குருகுலத்தில் சேவை பண்ணினவரு. மத்தியானம் வந்தது, அநும்மாவின் மக. போதுமா?...”

“எனக்கொண்ணுமில்லம்மா, நீங்க சொன்னதை அவங்க கிட்டப் போயிச் சொல்றேன். எனக்கென்ன ?...”

“மாதாஜி, நா வரேன். உலகம் எப்பிடியோ போயிட்டிருக்கு. கவலைப்படாதீங்க... வரேன்...”

சிங்கு போகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/269&oldid=1050305" இலிருந்து மீள்விக்கப்பட்டது