பக்கம்:உத்தரகாண்டம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    271

பெரியதனக்காரர்கள், மேல சாதி என்பவர்கள், ஒரே ஒரு தெருதான் ஐயமார் தெரு என்று ஒன்று இருந்தது.

நாலைந்து வீடுகள் தாம். ஏறக்குறைய அம்பது அம்பத்தைந்து வருசங்கள். அய்யாவின் பங்காளி - வகை, பெரியப்பா மகன் ஒருத்தர் தான் ஊரோடு இருப்பதாக ராஜலட்சுமி சொன்னாள். இது மிக உகப்பாக இருக்கிறது. விட்டபந்தம் - மீண்டும் தொற்றிக் கொள்ள வேண்டாம். வாய்க்கால்; காவேரி முங்கிக் குளித்து, சீலையைத் துவைத்து மரத்தில் கட்டி உலரவைத்துக் கல்லைக் கூட்டி சட்டியில் பொங்கி...

உடனே வண்டியேறிவிட வேண்டும் என்ற கிளர்ச்சியில் அவள் எழுந்திருக்கிறாள். உட்காரும் போதே தலை சுற்றுகிறது.

இதென்ன.. இப்படி? ஆட்சி...!

கையை ஊன்றிக் கொண்டு சமாளிக்கிறாள். இரவு உறக்கமில்லை என்றால், பின் கட்டைத் திறந்து கொண்டு இயற்கை வாதனையைத் தீர்த்துக் கொள்ளக் கழிப்பறை நாடும் தொல்லை வரும். ஆனால் முதல் நாள் அவள் அப்படியே படுத்திருந்திருக்கிறாள். சுவரைப் பற்றிக் கொண்டு விளக்கைப் போடுகிறாள். கதவுத் தாழைத் திறக்கிறாள். வாயில் படியைக் கடந்தாள். தலை கிர்ரென்று சுற்ற, நிலை தடுமாறுகிறது. விழுந்தது நினைவில்லை.


28

வளுக்கு நல்ல நினைவு வரும் போது, அவள் வண்டியில் போய்க் கொண்டிருக்கிறாள். அவளை வண்டியில் ஏற்றியது, மங்கலாக நினைவில் நிழலாடுகிறது. ‘ஏம்பா, என்னிய எங்கே கொண்டு போறீங்க?...’ அவள் கேள்விக்குப் பதில் இல்லை. முன்னே யாரோ வண்டி ஓட்டுகிறான். கார்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/273&oldid=1050351" இலிருந்து மீள்விக்கப்பட்டது