பக்கம்:உத்தரகாண்டம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    281


சிறை உண்ணாவிரதம் பற்றிச் சொல்வார்கள். சுதந்தரம் வந்த பின்னரும், தொழிற் சங்கம், போராட்டம் என்று பெண்கள் சிறைக்குப் போனார்கள். உண்ணா விரதம் இருக்கும் போது, உறவினர்களை விட்டு நல்ல நல்ல பண்டங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்வார்களாம். ஆனால், உயிர் போனாலும், கோரிக்கை நிறைவேறாமல் உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ள மாட்டார்கள்.

இப்போது இவளுக்குப் பசிக்கிறது. ஆனால் எழுந்திருக்க வேண்டாம். கண்களை மூடிக் கொண்டு கிடக்கிறாள்.

எத்தனை நேரமாயிற்று என்று தெரியவில்லை.

“ஆயா...ஆயா... ? எந்திரி... கன்னிம்மா சோறு கொண்டாந்திருக்கிறேன். வாழக்காப் பெரியல்... வெந்தியக் குழம்பு வச்சிருக்கிற எந்திரு, பாவம், கசுமாலங்க, கொல பட்டினி போட்டுட்டானுவ... எந்திரம்மா... மணி ஒம்பதடிக்கப் போவுது...”

இது நிசமா, மறுபிறப்பா?...

“அந்தப் பொறுக்கி வோணுன்னே கோழிக்குருமாவும் அதும் இதும் கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கு! என்ன, ரஞ்சிதம்மா கூட்டுவிட்டாங்க. அவுங்க பங்களாலதா நா இருப்பேன். அசுவினி மேடம் கூட்டியாந்தாங்க, வந்தேன். ம், வா, பாவம்...”

ஈரத்துண்டால் முகம் திருத்தி, அவளைச் சாப்பிட வைக்கிறாள்.

“நீ சாப்பிட்டியா கன்னிம்மா?”

“என்னப்பத்தி இன்னா ஆயா? நீங்க வயசானவங்க. சீக்காளி. சாயங்காலந்தா அசுவினி மேடம் ஃபோன் போட்டு விசாரிச்சாங்க. என்னக் காலமேயே அங்க போகச் சொல்லிட்டாங்க. இங்க, சந்திரி அம்மாதான் எல்லாம் பாக்கும். அவங்க கட்சி காரியமா வெளியூர் போயிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/283&oldid=1050363" இலிருந்து மீள்விக்கப்பட்டது