பக்கம்:உத்தரகாண்டம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    283

வுழுந்தேன்னு தெரியல. முருகன்... என்ன நிணச்சிருக்கிறான், எந்த கதிக்கு ஆளாக்கப் போறான்னு தெரியல...”

“ஏம்மா, உங்க சொந்த மகன் வூட்டுக்குத்தானே வந்திருக்கிறீங்க?”

“சொந்தம். இந்த வயித்தல எடம் குடுத்தேன். அவங்கப்பாரு, குடிப்பாரு. ஆனா... கட்டின பொண்சாதியத் தவுர ஒரு நிழலக்கூட அந்த எண்ணத்துல நினைக்கல. அந்தப்பெரி மணிசர், பத்து நாளயப் புள்ளயக் கையிலெடுத்து, ‘மோகனதாசு’ன்னு அந்த மகாத்துமா பேர வச்சாரு. “தாயம்மா, நம்ம புள்ள பெரி...ய ஆளா வருவாம்பாரு!"ம் பாரு. அவரு எதும் பார்க்காம நல்ல படியாப் போய்ச் சேர்ந்தாரு...”

அவள் இவள் கையை அழுத்திப் பிடிக்கிறாள். அவளும் உணர்ச்சி வசப்படுவது தெரிகிறது... இவள் ரஞ்சிதத்தின் இளைய மகளா? பேரன் மனைவியா?

“கண்ணு, நீ யாருன்னு இன்னும் தெரியலம்மா?”

“நான் யாரா?...”

கேட்டுவிட்டுப் புன்னகை செய்கிறாள்.

“நிச்சியமா தெரியணுமா?...”

“உனக்குச் சொல்ல விருப்பமில்லேன்னா வேணாம். ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்...”

“உங்களுக்குச் சேலை கொண்டுக் கொடுக்க வேணும். வெளியில கொண்டுவிட வேணும்... அதானே?”

“முருகா, எனக்கு அது போதும். ரோட்டுமேல சின்னஞ்சிறுசுகல்லாம் வண்டிகளுக்குப் பலியாகுதுங்க. அப்படி எங்கியாலும் நா ரோட்டு மேல வுழுந்திருக்கக் கூடாதா?...”

“ஆமாம் பாட்டிம்மா. இந்த முருகனுக்குக் குசும்பு ரொம்ப. என்ன செய்ய, அவுரே ரெண்டு பொண்டாட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/285&oldid=1050365" இலிருந்து மீள்விக்கப்பட்டது