பக்கம்:உத்தரகாண்டம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    285

இவங்க வலையில் விழுந்து... எங்கம்மா.” கண்கள் குளமாகின்றன.


“நிர்வாணக்காதல்’னு ஒரு படம். பேரே கழிசடை. அது வெளிவரல. எங்கக்காவுக்குச் சான்ஸ் குடுக்கிறதா, சொல்லி, இங்கே கொண்டாந்து, குலைச்சானுவ. அப்பன் அன்னிக்கு, மகன் இன்னிக்கு.”


“சிவா சிவா...” என்று காதைப் பொத்திக் கொள்கிறாள்.

“தற்கொலை, யாரையோ டயரக்டரைக் காதலிச்சா, ஏமாற்றம்னு’ பத்திரிகைக்காரங்க மூடிட்டானுவ... எல்லா மீடியாவும் இவங்க கிட்டத்தானே இருக்கு? அமுக்க வச்சி, மலத்தைத்தின்னு பிழைக்கிற தொழில்களாப் போயிட்டுது...”

“அம்மா, நீ வேற எதுனாலும் பேசு. ரணத்தைக் கிளறும் ஆபிரேசன் வானாம். ரொம்ப வலிக்குது... உன்னியப் போல ஒரு பத்து, நூறு ஆயிரம் பேருக சேரனும். நான் சாவக் கூடாது...”

“வாங்க. அதான் ஸ்பிரிட்..” கையை அழுத்தமாகப் பற்றுகிறாள். ‘டொக்டொக்’ கென்று கதவு தட்டப்படுகிறது.

எழுந்து கதவைத் திறக்கிறாள்.

“குடீவினிங் மேடம். இப்பதா இவங்கள- பி.பி. பாக்க வந்தேன்...”

“பார்த்தாச்சில்ல?... போ!” அவள் மின்னல் போல் இவளை ஒரு கணம் பார்த்துவிட்டுப் போகிறாள்.


“அத்தே...? வாங்கத்தே...” என்றவள் அறை வாயிற்படியில் நின்று அவள் ஒழுங்கை கடந்து செல்வதையே பார்க்கிறாள். பிறகு கதவைச் சாத்திவிட்டு வருகிறாள்.

“இதுங்கல்லாம் கொஞ்சம் சந்து தெரிஞ்சாலே நுழைஞ்சு பத்திக்கும். தாசி குலம். சீரழிஞ்ச குலம். இவ பாட்டி தொண்ணுாறு வயசு, இன்னும் இருக்கா. இதுங்களல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/287&oldid=1050367" இலிருந்து மீள்விக்கப்பட்டது