பக்கம்:உத்தரகாண்டம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    293

றானுவ. வூட்டு வேலைக்கு வரவ, கேபிள் டி.வி. வாசிங்மெசின் இருக்கான்னு கேக்குறாளுவ. கிராமத்துல, ஒரு நேரக்கஞ்சிக்கு மாடா உழச்சவனுகள, நம்பிக்கைன்னு தூக்கி வச்சிது தம்பி. அவனுவ நம்ம சோத்தையே தின்னுப்பிட்டு, நமக்கெதிரா கட்சி மாறி கொடி பிடிக்கிறானுவ...”

இவள் கையைப் பற்றி நிறுத்துகிறாள்.

“சந்திரி, இந்த வெவகாரம் கேட்க எனக்குத் தெம்புமில்ல, திராணியுமில்ல. நான் என்னிக்குமே யாரும் கெட்டுப் போகணும் தும்பப்படணும்னு நெனக்கலம்மா. இப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிற. பித்ருசாபம், மாத்ருசாபம்னு ஏன் உறுத்தணும்?...அவங்கவுங்க நெஞ்சைத் தொட்டுப் பாத்துத் திருந்தனும். தப்புத்தப்பாப் பண்ணி ஒரு தப்ப மூட முடியாது. இந்தத் தேசமே, சனங்களே உங்க அரசியலால பாழாயிட்டிருக்கு தாயி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடாத குறையா கேட்டுக்கிடறேன். எனக்கு இந்த மாளிகை வாசம் வோனாம். நான் போயிடறேன். கேக்கிறதெல்லாம் ஒரு வெள்ளத்துணிச் சீல. வெளில எறங்கினா இது ஒட்டாம நழுவிடுமோன்னு பயமா இருக்கு...”

கண்ணீர் மல்குகிறது.

“இத பாரு, உனக்கு இதுதான் வீடு. நீ ஒரு பத்து பைசா தேடி, புள்ளைக்கு நல்லது பொல்லாது பண்ணல. அவனே தலைதுாக்கி முன்னுக்கு வந்தன். நீ எதுக்கு ஆரு சொத்தையோ, ஆரு வச்சதையோ பாம்பு மாதரி காக்கணும்? அத்தனை அக்கரை உள்ளவங்க, அந்த மக புருசன், புள்ள. அவுக தாயாதி பங்காளியக் கூட்டு வரட்டும், என்னமும் செய்யட்டும்? நீ அங்க அட்டையா புடிச்சிட்டுகிறதுக்கு பராங்குசம் மட்டுமல்ல- வேற எல்லாருமே என்ன சொல்றாங்க தெரியுமா? அவங்களல்லாம் வரவுடாதபடி நீயே செய்திட்டியாம். எனக்கே நாக்கப் புடுங்கிட்டுச் சாவலாம் போல இருந்திச்சி. “பெரியவரு, அந்தப் பொம்புளய வச்சிட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/295&oldid=1050398" இலிருந்து மீள்விக்கப்பட்டது