பக்கம்:உத்தரகாண்டம்.pdf/296

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294   ✲   உத்தரகாண்டம்

ருந்தாரு- அரச பொரசலா சரோ அம்மாக்குத் தெரியும். மக செத்ததும் அதா செத்திட்டாங்க. இப்ப, வூட்ட எம் பேருல எழுதி வச்சிருக்காங்க. யாரும் வரமுடியாதுன்னு சொல்றதுன்னு... சொல்றாங்க. இதெல்லாம் இன்னிக்கு அரசியல். கட்சி தலைவரா கவுரவமா, எம்.பியா இருக்கவருக்கு எத்தினி கேவலம்?” இவளுக்கு உடலே பற்றி எரிகிறது சீதை அக்கினியில் எரிந்த போது இப்படி இருந்ததா? அடிபாவி? நீ என் உதிரத்தில் ஜனித்தவளா?

பளார் பளாரென்று அவள் கன்னங்களிலும் முகத்திலும் அறைகிறாள். கை எரிகிறது.

சந்திரி விக்கித்துப் போகிறாள்.

“ஏண்டி, எலும்பில்லா நாக்குன்னா, எது வேணாலும் யாரை வேணுன்னாலும் பேசுமா? நீ நர்சு வேலைக்குப் படிச்சவடீ? ஆம்புள பொம்புளன்னு பேதம் இல்லாம எல்லாரையும் தொட்டே- அதனால உனுக்கு அத்தினி பேரும் தொடுப்புன்னு ஆயிடுமா? எந்தப் பன்னி சன்மண்டி இதைச் சொல்லிச்சு? அத்தத் தூக்கிட்டு வந்து எம்மூஞ்சில அவுத்துக் கொட்டுற? நா இந்த நிமிசமே இங்கேந்து போயிடுவ. அன்னைக்கு நான் வுழுந்தா, அப்படியே சாவட்டும்னு வுடவேண்டியது தான?... நாக்கு அழுவணும்னு நா சொல்ல மாட்டே. அன்னைக்கு, அந்த மனிசன்மேல, வுழுந்து அடிச்சி சட்டையக் கிழிச்சி காரை நொறுக்கி அவுமானம் பண்ணினானே, உன் தம்பி பெரி... அரசியல் தலவன்! அப்போ, இளம்புள்ளைங்க. கேசுகீசு ஒண்ணும் வாணாம், வுட்டுடுங்கன்னு போலீசு இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னவருடி அந்தப் பெரி...மனிசர்! அவங்கல்லாம் தெய்வம். அந்தப் பத்தினி பேரில உன் விசத்தகக்குற. பொம்புளக்கிப் பொம்புள சேத்தவாரி அடிச்சிக்குதறுற சாதியில்லடி நாங்க! அப்புடி ஆகக்கூடாது"ன்னு... கண்கள் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது.