பக்கம்:உத்தரகாண்டம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    297


அலையடித்து ஓய்ந்து இருள் வருகிறது, நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவளைப் பொறுத்த வரையில் ‘காலமே’ நின்று போகிறது.

உறக்கமோ, மயக்கமோ, நினைவு மறப்பது, முருகா, உன் கருணை....

இருள் படலங்கள். கரைகின்றன.

உதயக்கதிர் போல் கன்னியம்மாவின் குரல் செவிகளில் விழுகிறது.

“ஆயா... ஆயா, நான் கன்னிம்மா...”


ஆ...? கன்னிம்மா...”

அவள் கையில் ஒரு தம்ளர் இருக்கிறது.

“வாங்க. ஆயா, மூஞ்சி கழுவிகினு இந்தக் காபிய குடியுங்க. உங்களுக்கூடத் தெம்பு இருக்காது. பிசாசுங்க, பிசாசுங்க, உங்கள என்ன கோரமா சொல்லுதுங்க? பொறம்போக்கு... வாங்க...” அவளை அழைத்து முகம் கழுவ, நீராடச் செய்கிறாள். ஒரு பூப்போட்ட வாயில் சீலை கொண்டு வந்திருக்கிறாள்.

“இது என் சீலை. நீ உடுத்திக்க ஆயா...” கட்டித் தழுவி முத்தமிடுகிறாள்.

“அசுவினி மேடம் கிட்டச் சொல்லிருக்கிறேன். உனக்குச் சீல வாங்கி எப்படீன்னாலும் தந்திருவாங்க. நாம போயிரலாம். நாளைக்கி...”


“நாளைக்கி வேணாம். இப்பவே போகலாம் கண்ணு. என்ன எப்டீன்னாலும், டேசன்ல கொண்டு வுட்டுடு... அது போதும்.”

அவள் குனிந்து மெதுவான குரலில், “நீ உம் புள்ளயப்பாக்க வோணாமா? கண்ணாடிப் பொட்டில ஐஸ் வச்சி, ஆகாசத்தில பறந்து வருது. சனமோ சனம், மாலையும் பூவுமா நிக்குதுங்க. டெல்லிலேந்து அமைச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/299&oldid=1050412" இலிருந்து மீள்விக்கப்பட்டது