பக்கம்:உத்தரகாண்டம்.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
300   ✲   உத்தரகாண்டம்
 


கண்ணமங்கலமா, கிளியந்துறையா?... சம்பு அம்மாவோடு இருந்த பூவனூரா?

எந்த ஊர்? எந்த ஊருக்கு அவள் சீட்டு எடுத்திருக்கிறாள்? கண்ணமங்கலம், ஆத்து மேட்டில், மறுபக்கம் பெரிய வாய்க்கால், வாய்க்கால் மேட்டில் கோயில், முன்புறம் பெரிய மைதானம். பெரிய அரசமரம். வேப்பமரம். மேற்கே ஆற்றுப் படித்துறையில் இதே போல் மரமுண்டு. அங்கே பிள்ளையார் இருப்பார்.

அழகாயி கோயிலை அடுத்து, வாய்க்காலின் மறுபுறம் குடிசனங்களின் ஊர். அதை அழகாபுரி என்றே சொல்வார்கள். அய்யா குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்கள் அந்தப் பகுதி முழுவதும் இருந்தன. எல்லாவற்றையும், அந்தக் குடிமக்களுக்கே வழங்கி, கீழ்ச்சேரி என்ற பெயரையும் வினோபா அடிகள் வந்த போது மாற்றிவைத்தார்... அந்தக் கோயில் முன் அவர்கள் திருமணம் நடந்தது. அவள் சேரிச்சாதிதான். ஆனால், புருசர் அய்யாவுக்கு உறவுள்ள மேல்சாதி. அந்த இடங்களை ‘சமீன்’போல் ஆண்ட சாதி. எத்தனையோ முறைகள் அழகாயி திருவிழாவுக்கு அம்மாவுடன் அவள் சென்றிருக்கிறாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஊருக்குச் செல்லவில்லை. அய்யாவும் காலமான பிறகு, அவருக்குச் சிற்றப்பா மகனாகும் முறையில் ராமலிங்கம் என்பவர் வந்தார்.

“தாயம்மாவா? எப்படிம்மா இருக்கே?...” என்றார்.

“ஊரே, நம்ம உறவெல்லாம் காலி, எவனெவனோ கட்சி வந்திருக்கிறா. ஈசுவரன் கோயிலுக்கு ஒருவேளைப் பூசைக்கு வரும்படி இல்ல... அழகாபுரின்னு பேர வச்சி நிலம் நீச்சுக் குடுத்து வாழவச்சாரே, எல்லாம் எடுபட்டு பணம் சம்பாதிக்க, அங்க இங்கேன்னு பூடிச்சி. அவவ சாமி பேரச் சொல்லி, அருவா கத்தி எடுக்கிறானுவ.போன பஞ்சாயத்துத் தேர்தல்ல, ஊரே ரெண்டு பட்டுப் போயிடிச்சி. எதோ