பக்கம்:உத்தரகாண்டம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
312   ✲   உத்தரகாண்டம்
 

திறந்திருக்கிறது. நேராக வாய்க்கால். அந்தப் பாலம் தாண்டினால், ஆற்றுமேடு வரும் வரை தென்னந்தோப்பும், வெற்றிலைக் கொடிக்கால்களும் இருக்கும். ஏதோ வீடுகள், மட்டும் தெரிகின்றன. குடை ஆன்டெனா...

அவர்கள் முன் ஒரு போலீசுக்காரன் வருகிறான். தொந்திதெரிய, நடுத்தர வயசுக்காரன். கையிலுள்ள தடியால் தரையைத்தட்டி, “நில்லுங்க? எங்க வரிங்க?” என்று அதிகாரமாகக் கேட்கிறான். கன்னியம்மா பேசவில்லை.

இவள் யோசனை செய்கிறாள். சட்டென்று, ‘அழகாயி வூட்டுக்கு’ என்று சொல்கிறாள். அதற்குள் கன்னியம்மா சமாளித்து, “ஆ, எங்கத்த வூடு இருக்கு” என்று தொடருகிறாள்.

“அத்த வூடா? ஆரு, பேரு சொல்லு!”

“அதா அழகாயின்னு சொன்னேன்ல; அழகாபுரிப் பக்கம்...”

“அழகாபுரிப்பக்கம் ஆரும் போகக்கூடாது. நடங்க, ஸ்டேஷனுக்கு?”

“ஏய்யா? எதுக்கு நாங்க ஸ்டேஷனுக்கு வரணும்? எங்க மக்க மனுசங்கன்னு இருக்கமாட்டாங்களா? நா வாக்கப் பட்டது இந்த ஊருதா. இது பேத்தி, நாங்க பட்டணத்திலேந்து புறப்பட்டு, ஒரு நேர்ச்சக்கடன்னு வாரோம். இங்கியே தங்குவோம். உங்களுக்கு தியாகி எஸ்.கே.ஆர். தெரியுமாங்க?”

“இதபாரு, இந்தத் கதயெல்லாம் வாணாம். இங்க இப்ப தியாகியுமில்ல, ஆருமில்ல. ஊருக்குள்ள ஆருவரதானாலும் எங்களுக்குத் தெரியணும். நட ஸ்டேஷனுக்கு. கலவரம் நடந்த ஊரு, சேதி தெரியாது?”

“நாங்க என்னப்பா பேப்பர் படிக்கிறது? நேத்து ராத்திரி வண்டிய நடு வழியிலே நிறுத்திட்டாங்க. அங்கேந்து பஸ் புடிச்சி காலம புதுக்குடி வந்தோம். ரயில் பாதையில் தண்ட