பக்கம்:உத்தரகாண்டம்.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
316   ✲   உத்தரகாண்டம்
 


காபியில் ஈ வந்து குந்துகிறது.

அவள் அதையே வெறித்துப் பார்க்கிறாள். கன்னிம்மா, நீதான் அழகாயி. நீ ஆங்காரியாயிடுவ. உனக்காக நான் பயப்படல அழிஞ்சி போயிடுவிங்கடா?...

அவன் மட்டும் தொப்பியைத் தலையில் இருந்து எடுத்துக் கொண்டு குனிந்து உள்ளே வருகிறான்.

இவளுடைய பொங்கல் வெடிக்கிறது.

“ஐயா, எம் பேத்தி எங்க? அவள என்ன பண்ணினிய?... இப்படி நீங்கல்லாம் பொம்புள வெறிபுடிச்சி அலையுற தாலதா நாடு இப்படி ஈரமில்லாத பாலவனமாயிடிச்சி. குடும்பக் கட்டுப்பாடுன்னு, லட்சலட்சமா கருக்கொல பண்ணிப் போட்டீங்க. வெறி அதிக மாயிடிச்சி. அது கொறயல. பூமாதேவி தாங்குவாளா? பாவிங்களா? இந்த மண்ணு, தண்ணி மரம் மட்டை எல்லாம் உங்க ஒழுக்கத்துல தாய்யா துளிக்கணும். அன்னாடம் கொலை, ஆத்தாளே, பெத்தது பொண்ணுன்னா அழிக்கிறா. ரத்தவெறி.”

அவள் கையை அவன் பற்றுகிறான். அழுத்தமாகப் பற்றி உட்கார வைக்கிறான். அவனுக்கும் கை நடுங்குகிறது.

“உணர்ச்சி வசப்படாதீங்க பெரியம்மா. நீங்க சொல்லுற குற்றச் சாட்டுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. ஏனுன்னா ஆதிக்கம் செலுத்தும் ஆண்வர்க்கமா பொறந்திருக்கிறேன். உங்க முன்ன வெக்கப்படுறேன், ஆணாப் புறந்ததுக்காக. உங்க பேத்தியால எங்களுக்கு உதவ முடியும். நீங்க காபி குடியுங்க, உங்களைக் கூட்டிட்டுப் போற...”

“எனக்குப் புரியலியே தம்பி, அவ உதவறத என்னாலயும் முடியும். நாந் தப்பாப் பேசிட்ட போல...”

“தப்பாப் பேசல. நாயமாத்தான கேட்டீங்க. இங்கே மூணு நாளக்கு முன்ன ரத்தக்களரி. அழகாபுரத்திலேந்து