பக்கம்:உத்தரகாண்டம்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
322   ✲   உத்தரகாண்டம்
 


“என்ன சொல்றா இவ?” என்று மற்றவர் சாடை காட்ட அது, ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது நெஞ்சு நிறைகிறது.

நேராக கன்னியம்மா, கழுவிச் சுத்தம் செய்திருப்பாள் என்று அந்த வீட்டுப் பக்கம் வருகிறாள்.

அந்த வீட்டின் முன், துணிகள் கசக்கிப் போட்டிருக்கிறாள். அவள் வேறு சீலை உடுத்திருக்கிறாள்.

“ஆயா, வாங்க. எங்க குளிச்சீங்க? இத இவங்க பக்கத்து வூடு. உள்ள கிணறு இருக்கு. குளிச்சி, துணியெல்லாம் கசக்கி உலத்திட்டேன். இந்தச் சீல, முன்ன வந்தாங்களே, அவங்க அனுப்பிய மூட்டயில இருந்திச்சி. ஜாக்கெட் அதையே போட்டுட்டேன். உங்களுக்கு ஒரு சீல, ஜாக்கெட் கூட இருக்கு...”

“நப்ப மூட்ட போலீசு டேசன்ல இருக்கு. கன்னிம்மா, அத்தக் கேட்டு வாங்கியாரனும் இல்ல? உன் துணிமணி இருக்கு...?”

“ம்... கேட்டே, அந்த போலீசுகாரரு, அதா நம்ம முதல்ல வெரட்டினாரே, அவுரு “அப்டீல்லாம் தந்திட மாட்டம், அதுக்குள்ள நீங்க வெடிகுண்டு கத்தி வச்சிருக்கீங்களான்னு பரிசீலனை பண்ணிட்டு பிறகுதா தருவம்...”ன்னாரு.”

அந்தப் பக்கத்து வீட்டுக்காரியே அவர்களுக்கு உள்ளே அழைத்து, இலையில் பொங்கிய சோறும் குழம்பும் படைக்கிறாள். “காய் எதும் இல்லம்மா. ஊறுகாய் வேணுமா?”

“வாணாம்மா... இதே நல்லாருக்குது... நீங்கல்லாம் இங்கியே தா இருக்கீங்களா தாயி?”

“ஆமாம்மா. எங்க வூட்டுக்காரர போல்சு புடிச்சிட்டுப் போயிருக்கு. பயம்மா இருக்கு. டி.வி.லயும் சினிமாலியும் காட்டுறாப்புல ஆயிடிச்சி. அந்தப் பைய பெரி படிப்புப்