பக்கம்:உத்தரகாண்டம்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
326   ✲   உத்தரகாண்டம்
 


மனசு பொல்லென்று பூக்கிறது.

“நம்ம பேரப் பொண்ணு எதுங்க? ஒரே சைசில அஞ்சாறு பொண்ணுங்க இருக்காங்க...”

“சாதி இனம், மதம் இல்ல, முஸ்லிம் கிறிஸ்தவர் இருக்காங்க. கறுப்பா ஒரு பொண்ணு எடுப்பான பல்லோட முடியக் கட்டிட்டுப் பாத்திருப்பிங்களே?...”

“ஆமா, அதான் பேத்தியா?”

“அது மத்ய பிரதேசத்து ஆதிவாசிப் பொண்ணு. ஃபோட்டோ கிராஃபராம். நம்ப முடியல. சுதந்தர பாரதத்தில கண் முன்ன நிறைய அழிவுகளைத்தான் பார்க்கிறோம்னு எனக்கு மனசு ரொம்பத் தாங்கலா இருந்தது. நீங்க பாத்திருப்பீங்க, அழகாபுரி நிசமாவே அழகாபுரியாத் தான் இருந்திச்சி. சாராய கலாசாரம், டி.வி. சீரழிவு, வந்து தா முன்னேறப் பாக்குறவங்களையும் காலவாரி இழுக்குது... நீங்க வரப்ப, பன ஓலக்குடிசைப் பாத்திருப்பீங்களே? அதெல்லாம் சம்பாதிச்சும் சாராயத்திலும் லாட்டரிச்சீட்டிலும் சீரழியும் சனங்கள்...”

இவர்கள் பேசும் போதே அவர்கள் எல்லோரும் வரும் அரவம் கேட்கிறது.

“அழகாயி கோயில்ல மண்டபம் கட்டிருக்காங்க, புதுசா வர்ணம் எல்லாம் அடிச்சிருக்காங்க. ஆனா, ஒரு பெரிய வேப்பமரம் உண்டு. பெரிய எடத்த அடச்சி, புள்ளயாரை வெளியே தள்ளி, எதுக்கு மதில் எழுப்பி கேட்டுப் போட்டு, பூட்டுப் போட்டிருக்காங்க அய்யா? கெணறுகூட உள்ள அம்புட்டுக்கிச்சி, பொங்கல் வைக்கிறது, கூத்துக்கட்டுற தெல்லாம் இல்லியா?...”

“உள்ளுக்குள்ள பலிபீடம், சூலம் எல்லாம் இருந்திச்சி. இருக்கும். பெரிய உண்டியல் பொட்டி இருக்கு. முன்னெல்லாம் அழகாயி ஏழையா இருந்தாம்மா. மிஞ்சிமிஞ்சி