பக்கம்:உத்தரகாண்டம்.pdf/335

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    333
 


“நான் போகல. நான் நேர ராஜாப்பூர் போன. பஹ்ரி கட்வால பக்கம், அப்பா அங்கதா, சிப்கோ மூவ்மென்ட்ல ஆக்டிவா போராடிட்டிருக்காரு. பிளாஸ்டிக்குப் பைய சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வூட்டுவதுன்னு. அவரோட நிறையப் பேர் இருக்காங்க. சுப்பய்யான்னு ஒருத்தரப் பார்த்தேன். அவுரு உங்ககூட ஏதோ கோயிலுக்கு வந்தாராம். வெறி நாயி கடிச்சிச்சாம்...”

“அப்பா, எல்லாம் சொல்லிட்டானா?...”

“ஆமா, தம்பி, அங்க நீங்க போய், ஒரு வெறி நாய் ஒழிப்பு மூவ் மென்ட் செயல் படுத்துங்கன்னாரு. எதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார்...”

“நீ வீட்டுக்குப் போகலியா?”

“செங்கமலமும் நானும் வாசலோடு போனோம். சாமானெல்லாம் லாரில ஏத்திருந்தாங்க. நேரா அநு ஆண்டியப் பார்த்தோம்...”

“அவங்க உங்களுக்குத் தெரியுமா... இல்ல, உனக்குத் தெரியுமா?”

“நிசாவும், வினோதும் எனக்கு ரொம்பப் பழக்கம். நிசா ஸ்டேட்ஸ்ல, ‘தியேட்டர்’ ஸ்டடீஸ்க்கு வந்திருந்தா. எதோ ஸ்காலர்ஷிப்ல. வினோத் அருமையான ஆக்டர். ரெண்டு பேரும் டெடிகேஷனோட ஈடுபட்டவங்க. ஸஃப்தர் ஆஷ்மியக் கொன்னாப்புல அவனக் கொன்னிட்டாங்க... இந்த நிறுவனங்களுக்கு எதிரா, தட்டிக்கேட்டா, உடனே தீவிரவாத முத்திரை விழுந்திருது. அதுவும் செப்டம்பர் 11க்குப்பிறகு, இந்த பயம், நிரபராதிகளையே தீவிரவாத விலங்குக்குள் தள்ளுது... அதா, ரொம்ப கவனமாச் செய்ய வேண்டியிருக்கு. அப்ப எனக்கு, ஐ மீன், அநு ஆண்டியோட பேசுறப்ப, நீங்க இங்க வந்திருப்பீங்கன்னு தெரியாது. உங்க மகன் வீட்டுக்கு அனுப்பிட்டதாகவும் மயங்கி விழுந்ததாகவும், அம்ருத்சிங் அங்கில் விசாரிச்சிட்டு வந்து சொன்னாராம். அது கூட,