பக்கம்:உத்தரகாண்டம்.pdf/337

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    335
 


“கரமா கரம் வேண்டாம். எல்லாம் பண்ணி முடியுங்க. நாங்க சாப்பிட்டுட்டுப் போடுறோம்.”

மதியம் சமைத்து வைத்த சோறு, குழம்பு சப்பாத்தி, பொரியல், இப்போது செய்த காய்-சப்ஜி என்று கலந்து பரிமாறி, கலந்து பேசி...

அவளை உட்கார வைத்துப் போடுகிறார்கள்.

“அடாடா, வாங்க தம்பி ... என்ன கையில?”

“இது, அவங்க, பெரியம்மாவுடைய பை. அதைக் குடுத்திட்டுப் போகலான்னு வந்தேன். அவங்களுக்கும் அவங்க பேத்திக்கும் நன்றி சொல்லணும்...” போலீஸ்காரத் தம்பி... எஸ்.ஐ...

“அடாடா... கைகழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

“நீங்களும் உக்காந்து சாப்பிட்டுப் போங்க தம்பி!” என்று ராமலிங்கம் உபசரிக்கிறார்.

“இல்லீங்க. பிறகு ஒரு நாள் பார்க்கலாம். நான் வீட்டுக்குப் போய் ஆறு நாளாவுது. குழந்தையும் அவளும் என்ன ஆச்சோன்னு கவலப்பட்டுட்டிருப்பாங்க. இப்ப மாசம் வேற. ஆயா, உங்க சேலை, எல்லாம் பத்திரம். பாத்துக்குங்க...”

“ஐயா... என் வெள்ள சீல, அந்தப் பொண்ணு குடுத்தது, சத்தியம், அதக் கற படாம... கொண்டு வந்திட்டீங்க... நன்றி, நன்றி ஐயா !”

◼◼◼