பக்கம்:உத்தரகாண்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    33

டின்னு... அதுவும் உண்டு. மதனி எங்களுக்குக் கேக்காம திட்டுவா. எங்கம்மா படுக்கையோடு கெடந்தா. அப்பா செத்த பிறகு ஆறு வருசம் இருந்தா; எதோ ஆச்சி. நா இங்கியே கெடந்து கழிச்சிடுவ. அஞ்சு வருசமாச்சு, இங்க வந்து. இனி இதா இடம்...”

இவள் இலையை இரண்டாக்கிக் கொடுத்து விட்டு ஊமையாகப் பின் தொடருகிறாள். நடை முடிந்து வாசல் மேல் திண்ணைப் படி இறங்கு முன் சங்கரி திரும்புகிறாள். சிறுகூடு. முன் நெற்றியில் சில நரைமுடிகள் விழுகின்றன. நல்ல சிவப்போ கவர்ச்சியோ இல்லை. நெற்றியில் சிறு குங்குமப் பொட்டும் அதற்குமேல் சிறிது திருநீறும் அவள் மங்கலத் தன்மைக்குச் சாட்சியமாக இருக்கின்றன. ஆனால் கழுத்தில் கயிறு இல்லை. ஒரு மணி மாலையும் ஓரிழைச் சங்கிலியும் தெரிகின்றன. பாஷனில்லாமல் கழுத்து மூடிய ரவிக்கை; நூல் சேலை...

“ஆச்சி, காஞ்சிபுரம் ரோடில, புதிசா ஓர் அம்மன் கோயிலும், ஆசிரமும் கட்டிருக்காங்களாம். ராஜராஜேஸ்வரி அம்பாளாம். அம்பாளின் பதினாறு வடிவங்களை சலவைக்கல் மண்டபத்தில் வைத்து பூசை நடக்குதாம். சுத்தி மரமும் சோலையுமா மனசுக்கு ரொம்ப எதவா, அமைதியா இருக்குதாம். பஸ் போற வழிதானாம். ரேவதி டீச்சர் பெளர்ணமி பெளர்ணமி போயிட்டு வராங்க. அவங்க என்னியக் கூப்பிடத்தான் செய்றாங்க... ஆனா, அவவூட்டுக்காரர் மத்தவங்க கூட நா எப்பிடிப்போக? ஆச்சி, நீங்க வாறீங்களா? ஒருநா போயிட்டு வருவோம்?”

“போலாம்மா, போனாப் போச்சி” என்று வழியனுப்பி வைக்கிறாள்.

சங்கரி, இதே நீளத்தில், பழைய வீட்டில் இருக்கிறாள். இந்தத் தெருவுக்குப் பேரே பழையனுர் தெருதான். இந்தப் பெரிய வீடு அம்மாளின் வழி வந்த சொத்து. அப்போதெல்லாம், சுற்றிலும் எதிரே பனமரங்கள் இருந்தன. மாந்தோப்பு... எல்லாம் ருமானி மாம்பழம். மாந்தோப்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/35&oldid=1049421" இலிருந்து மீள்விக்கப்பட்டது