பக்கம்:உத்தரகாண்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36   ✲   உத்தரகாண்டம்


“அப்படியா?... நல்ல கருத்துத்தான். ஆனால் அந்தக் காலத்தில நாங்கள் கல்வி ஒரு மனிதரை, ஒரு குழந்தையை முழு மனிதராக்க வேண்டும்னு நினைச்சோம்...”

“இப்பவும் அதேதான். நான் நேராகக் குருகுலம் ஸ்கூலைப் பார்த்திட்டுத்தான் வரேன். ரொம்ப ஆச்சரியம், அங்கே, இந்தி, இங்கிலீஷ் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க. அங்கேயிருந்து போகும் பிள்ளைகள் ஐ.ஐ.டி.க்கு நேராகப் போகும் அளவுக்குக் கல்வித்தரம் இருக்கு.”

ஐயா ஒன்றுமே பேசவில்லை.

“...நான் தொந்தரவு செய்ய விரும்பல. கல்விப் பணிக்கு இந்த இடம் ஒதுக்கித்தரணும். நான் கவர்மென்ட் மூலமா, வேண்டிய ஏற்பாடு செய்ய முடியும். கல்விப் பணிக்கு, தியாகி அய்யா, நன்கொடையாகத் தந்து உதவணும்...”

குரல் தழதழத்தது-

“ஐயாவப்பத்தி, ஒரே வாரிசான அம்மா, அந்த சகோதரியின் மறைவு எல்லாம் கேள்விப்பட்டு உருகிட்டேன். இந்த முழு பாரத நாட்டிலும், இப்படி ஒரு தியாகி இருக்க முடியுமா?”

உள்ளிருக்கும் அழுக்கை, நான்கு நாட்கள் குளிக்காத வியர்வையை மறைக்கத்தான் மருக்கொழுந்து சென்ட்டைப் பூசுவார்கள்? குறிப்பிட்ட ஒரு பத்திரிகை வரும்போதே அந்த சென்ட்மணம் வீசும். ராதாம்மா உடம்பு சரியாக இல்லாத நாட்கள்.

“தாயம்மா, இந்தப் பத்திரிகைக்கு ஏன் இப்படி சென்ட் போடுறான் தெரியுமா?... என்று கேட்பாள்.

“சென்ட் விளம்பரத்துக்கு இதில சென்ட் போடுறானா?”

“இல்ல தாயம்மா. இதில் இத்தனை அழுக்கு குப்பைகள் அச்சாயிருக்கு. அத்தைப் படிக்க இப்படி ஒரு சென்ட்டை போட்டு இருக்கிறாங்க...” இதெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகிறது? அறங்காவலர் குழு என்பார்கள். பராங்குசம் வந்து அய்யாவிடம் கையெழுத்து வாங்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/38&oldid=1049424" இலிருந்து மீள்விக்கப்பட்டது