பக்கம்:உத்தரகாண்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    59


“இல்ல, சின்னக்கா. இது... இவதா மூணாவது, மேகலா...”

“அடே... மேகலாவா? என்ன இப்படி வத்தக் குச்சியா, கறுத்து... வா... வாங்க..”

கிணற்றுக் கரையில் வாளியில் இருந்து, தண்ணீரை எடுத்துத் தேய்த்துக் கொள்கிறாள். “என்னமோ பூச்சி விழுந்தாப்பல கடிச்சிச்சி, எரிச்சலா எரியிது... நேத்தே ரங்கசாமி சொன்னா, மாமரத்துல பூச்சி புடிச்சிருக்குன்னு. பிஞ்செல்லாம் உதிருது; எலெயெல்லாம் சருகாக் காயுது. இத்தன நாள்ள, இப்படி ஒரு பூச்சி வந்ததில்ல...”

“பெரிம்மா... இதபாருங்க, உங்க வெள்ளச்சீலை... பச்சையா புழு போல...” என்று மேகலா, அவள் மேல் மாராப்பில் ஒட்டி இருக்கும் சிறு புழுக்ளை எடுத்துப் போட்டுக் காலால் தேய்க்கிறாள்.

கழுத்தண்ட... சுரீல்னு... “அய்யோ, இந்தப் புழுவா இப்பிடிக் கொட்டுது?...” என்று அவளே எடுத்துப் போடுகிறாள். மாராப்பை உதறுகிறாள்.

“இந்த வருசம் எங்குமே மா சரியில்ல. தை அறுப்பும் போது மழ கொட்டிச்சி. மாம்பூவெல்லாம் நாசமாச்சி. காஞ்சு காஞ்சு, குறுவைய நாஸ்தியாக்கிச்சி. ஆத்துல தண்ணியே இல்ல. கிராமத்துல, மனிசங்க இருக்கவே தோதில்லாம ஆகுது சின்னக்கா. பஞ்சாயத்துத் தேர்தல் வருமின்னயே சாதிச்சண்ட. காலனிப் பொண்ணு ஒண்ணுகூட, தெக்குத் தெரு மேச்சாதிப் பையன் ஓடிட்டான். கேபிள் டி.வி. வச்சிருந்தவ. காதல்... ஓடிடிச்சின்னு சொல்லிக்கிட்டாங்க. அது ஓடல. அப்படியே தோப்புல வெட்டிப் போட்டிருந்தாங்க...”

அவள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“முருகா...!”

“எப்டீப்படியோ ஆயிட்டது சின்னக்கா. சாமியில்லன்னு சொன்னதும் சாதியில்லேன்னு சொன்னதும் புள்ளார ஒடச்சதும், பூணுால அறுத்ததும் ஒரு காலம். இப்ப சாதி மட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/61&oldid=1049484" இலிருந்து மீள்விக்கப்பட்டது