பக்கம்:உத்தரகாண்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62   ✲   உத்தரகாண்டம்


“என்ன சர்ட்டிபிகேட்?”

“வேலைக்குத்தா. அது சம்பந்தமாத்தா, உங்களையும் பாக்க வந்தோம், சின்னக்கா?... உங்க குருகுல வித்யாலயாவில ஒரு டீச்சர் வேலைக்குன்னு நப்பாசையோட வந்தம். நம்ம புதுக்குடி கருமுத்து தெரியுமில்ல? அவப்பாருகூட, சுதந்தரப் போராட்டத்துல அடிபட்டு, செயில்லியே செத்துப் போனாரு...”

இவளுக்கு வெறுப்பாக வருகிறது.

“ராசம்மா, சொதந்தரப் போராட்டம்னு சொல்லாத, சொதந்தரம் வந்து என்ன வாழுது? அந்தப் போலீசு தேவல. இப்ப லாக்கப்புல அடிபட்டு சாவுறது மட்டுமா? போலிசுடே சன்க, பொம்புள மானம் குலைக்கிற எடங்களாகவே ஆயிட்டுது. புருசனக் கொண்டிட்டுப் போறது, அவன அடிச்சிக் குத்துசிராக்குது. பெறகு, பொண்சாதியக் கூட்டிட்டு விசாரணைங்கற பேரில அவன் முன்னாடியே இந்தத் தடியங்க அதைக் கதறக்கதறக் குலைக்கிறது. பெறகு அத்தளிெயே விடுறது. அது வூட்டுக்கு வந்து, காகிதம் எழுதி வச்சிட்டுத் தூக்கு மாட்டிக்கிச்சி. இப்படிக் கொஞ்ச நாமின்ன ஒரு பாதகத்தை எதித்து, பொம்புளங்க போராட்டம் வச்சாங்க. ‘மனிச உரிமை’ன்னு பேசுனாங்க. மின்ன மாதிரியா ராசம்மா? இப்ப எத்தினி வக்கீலு, டாக்டரு, பெரிய பெரிய ஆபீசரு பொம்புளங்க இல்ல? போலீசிலயே பொம்புளங்க இருக்காங்க. நம்ம கிஷ்னாம்மா இல்ல?... பழைய சர்வோதயக்காரங்க? அவங்க கூட வந்தாங்க. உண்ணாவிரதம்னு போனே. நானும், அய்யா போன பிறகு இந்த மாதிரி போராட்டம்னா, வந்து கூப்பிடுவாங்க. போயிட்டிருந்தே... இப்ப அந்தக் கதையெல்லாம் எதுக்கு? நீ தாசில்தார் ஆபிசுக்கு என்ன சர்ட்டிபிகேட் வாங்க வந்த? அத்தச் சொல்லு?”

“எத்தச் சொல்ல? இதுன் எதிர்காலம் என்ன, எப்பிடின்னு ஒண்ணும் புரியல. அண்ணன் புள்ளன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/64&oldid=1049494" இலிருந்து மீள்விக்கப்பட்டது