பக்கம்:உத்தரகாண்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    65


“இருக்கிறா. எனக்குத் தாலிக்கயிறும் பொட்டும் இருக்கு. இந்த ஆளு இருக்கிறது தா இப்ப பாரம். அண்ணன்னைக்கு மாட்டுவாகடக்காரன் வரலேன்னா, போடுற கூச்சல் சொல்லி முடியாது. முதுகில பொளவ வந்தது. என் உயிரை வாங்கினாரு. சின்னக்கா, நா ஒருத்தி எதுக்குப் பொண்ணாப் பெறந்தேன்? இப்பல்லாம் பொண்ணு பெறந்ததுமே எருக்கம் பால ஊத்திக் கொல்லுறாங்களாம். அது ரொம்ப சரின்னு தோணுது...”

இவள் மனம் தாளாமல் அவள் தோள்களைப் பற்றி ஆதரவாகக் கண்களைத் துடைக்கிறாள்.

“அழாத ராசம்மா, நீயே இப்படி அழுதா, இந்தச் சிறிசுக்கு என்ன கதி? கண்ணைத் துடை. காலம் சாப்பிட்டீங்களா, இல்லையா?”

அவள் கண்களை மேலும் மேலும் துடைத்துக் கொள்கிறாள். கண்கள் சிவந்து மூக்கு நுனி சிவந்து...

செவிகளிலும் இரண்டு மூக்கிலும் வயிரங்கள் பூரிக்க, இளமையின் பால் கொஞ்சும் முகம், இன்று எப்படியாகி விட்டது? உள்ளும் வெளியுமாகச் சூறாவளியில் சிக்குண்டு அலைபடும் ஒரு குடும்பப் பெண்...

“ஏம்மா, மணிமேகல, காலம எதாச்சும் சாப்புட்டீங்களா இல்லியா?”

“உம். சாப்பிட்டம்...”

“எங்க வந்து தங்கியிருக்கிறீங்க?...”

“சம்பக அண்ணியோட தங்கச்சி வீட்டில... மாம்பலத்தில. அங்கதா தங்கிட்டு நேத்து குருகுல வித்யாலயா போனம்...”

அவள் துணுக்குற்றுப் பார்க்கிறார். “குருகுலத்துக்கா போனிங்க?”

“ஆமா சின்னக்கா. சம்பகம்தா சொன்னா. குருகுல வித்யாலயா, மூணு இடத்துல பிரான்ச் வச்சிருக்காங்க. உங்களுக்கு, ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னு சொல்வீங்

உ.க.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/67&oldid=1049505" இலிருந்து மீள்விக்கப்பட்டது