பக்கம்:உத்தரகாண்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68   ✲   உத்தரகாண்டம்


“அதா சொன்னனே? அவுரு மடம், சாமின்னு என்னமோ ஆராய்ச்சி அது இதுன்னு பேசுறாங்க. மாசத்துல ஒருக்க வருவாராம். தாடி, முடி, காவி சட்டை, உருத்திராட்சம் போட்டுட்டு சேவாதிலகம் பட்டம் வாங்குறபடம் இருந்திருச்சி. இந்த எமிலி அம்மாதா பக்கத்துல...”

“பட்டம் குடுத்தது ஆரு?”

“அது எனக்குத் தெரியல. ஒரு தாடிவச்ச வெள்ளக்காரர்...”

“இந்தக் கத கெடக்கட்டும், நீ வந்த காரியம் என்ன ஆச்சி?”

“முதல்லயே சம்பகத்தின் தங்கச்சி, அப்ளிகேசன் ஃபார்ம் வாங்கி அனுப்பிச்சிருந்தா. அதை எழுதி, ஒரு ஏழெட்டு சர்ட்டிபிகேட்டோட இணைச்சி, சாதிச்சான்று, அப்பா, தாத்தா தெரிஞ்சவங்ககிட்ட வாங்கினது, நன்னடத்தைக்கு வேலை செஞ்ச இடங்களில் வாங்கினது எல்லாம் அனுப்பி ரிஜிஸ்தர்ல அனுப்பியது உள்பட முந்நூறு ரூபா ஆச்சி. ஒண்ணும் வரலேன்னு தான் நேர கூட்டிட்டு வந்தேன்... அங்க ஹிஸ்டரி டீச்சருக்கு இடம் இல்லையாம். பாடனி எம்.எஸ்.ஸின்னாத்தான் பார்க்கலாமாம். சின்னக்கா, இஸ்டரின்னா, சாபக்கேடா? ஊரில, இப்ப ஸ்கூல் இல்லாம இல்லை. நாலு கிண்டர் கார்டன் இருக்கு. எங்க ஏசண்டு, ஆறுமுகம், ஒண்ணுமில்லாம, மாமா முன்னாடி வந்து நின்னு, “தேங்கா எறக்களாங்களா? காயப்போட்டுடலாம், நூறுநூறா திருட்டுப் போகுது"ன்னு கேப்பான். ஆறு புள்ளங்க. வருசா வருசம் பெத்துப் போடுவா. எல்லாம் இங்கேந்து வளந்தது தா. இன்னைக்கு, அவவ, கழுத்து கொள்ளாம நகை என்ன, வயிரம், பட்டுன்னு, கிராமத்திலேந்து டாக்சில போறாங்க, வராங்க. டிராக்டர் நிக்கிது. ஒரு பயல் விவசாயம் படிச்சி ஆடுதுறையில் ஆபீசரா இருக்கிறான்... எங்கனாலும் கல்யாணம் காட்சின்னா, ஏங்கிட்டேந்து சங்கிலி, வளைன்னு வாங்கிட்டுப் போவா... இப்ப அத்தனியும் தோத்துட்டு நா, தலைகுனிஞ்சி அவங்ககிட்டப் போயி, நூறுக்கும் இருநூறுக்கும் கையேந்துறேன்... சத்தியமா இந்த இவ இல்லன்னா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/70&oldid=1049514" இலிருந்து மீள்விக்கப்பட்டது