பக்கம்:உத்தரகாண்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72   ✲   உத்தரகாண்டம்

கூச்சலும், ஓலமுமாக ஒரு கூட்டம் தெருவில் புகுந்து வருகிறது. இந்தத் தெருவில் ஒரு காலத்தில் இந்த பங்களாவே பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. பின் பக்கம் மட்டும் குளம் இல்லை, எதிரிலும் பெரிய நீர் நிலை இருந்தது; மரங்கள் இருந்தன; பன மரங்கள் உண்டு. பெரிய சாலையைத் தொடும் இடத்தில் ஜட்ஜ் பங்களா இருந்தது. ஜட்ஜ் யாரென்று தெரியாது. வில்வண்டி இருந்தது. கடுக்கன் போட்டுக் கொண்டு சிவப்பாக ஒரு ஐயர் வருவார். அவருடைய தாயார் பத்மாசனி அங்கே இருந்தார். அந்த அம்மை இறந்த பிறகு அவர்கள் யாரும் வரவில்லை. அதை அடகுக் கடைக்கார சேட் வாங்கி, முழுதுமாகத் தகர்த்து, வீடுகள் கட்டினார். அதேபோல் எதிர்ச்சாரியிலும் வீடுகள்... குளம் தூர்ந்து குப்பை மேடான போது, சீராக்கி, மறுபடி மரங்கள் வைத்தார். சிவப்புப்பூக்கள் பூக்கும் மரங்கள், வேம்பு, எல்லாம் நட்டார். இடது கைப்பக்கம் தள்ளி, பொட்டலாக இருந்த இடங்களில் கற்கள் நட்டு, பிளாட் போட்டுவிட்டார்கள். ஒவ்வொரு ஊராக முளைத்துக் கொண்டிருக்கிறது... அந்தப் பக்கம் தான் குஞ்சும் குழந்தையும் குடும்பமுமாக எங்கிருந்தோ பெயர்ந்து வந்து பிழைக்கிறது. பழைய காலங்களில் வெள்ளைக்கார துரை கட்டிய பங்களா என்று ஒன்று இருந்தது. இப்போது அதையும் இடிக்கிறார்கள். அங்கு யாரோ சாமியார் மண்டபம் கட்டப் போகிறாராம். பின்புறம் வேலிப் பக்கம் நின்று மாம்பிஞ்சு கேட்ட குழந்தைகள் அந்தக் கும்பலில் இருந்துதான் வந்தார்கள்...

“யம்மா, இப்பிடி ஒரு பய கருப்புக் கட்டம் சட்டை பேன்ட் போட்டுட்டு தொப்பி வச்சிட்டு ஓடினானா?” என்று விர்ரென்று வந்து நிற்கும் மோட்டார் சைகிள்காரன் கேட்கிறான். அவன்பின் உட்கார்ந்து வந்த பெண், “பாவி, சங்கிலிய அத்திட்டுப் போயிட்டான், டாலர் தாலியோட ஏழு சவரன் மா? வூட்டு வாசல்ல கோலம் போட குனிஞ்சிருந்தேன், ஒரு நிமிசமா வந்தது தெரியாம அத்திட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/74&oldid=1049527" இலிருந்து மீள்விக்கப்பட்டது