பக்கம்:உத்தரகாண்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76   ✲   உத்தரகாண்டம்

தில் இவன் தென்பட்டான். இவள் மகன் எம்.எல்.ஏ.வாக இருந்த நாட்கள். தடாலென்று இவள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வந்து விழுந்தான்.

இவள் துணுக்குற்று நின்றாள். “ஏம்ப்பா? சிவலிங்கமா?” அரசியலுக்கு வந்திட்டியா?... நீ நல்லாப் படிச்சி, உழைச்சி வாழனும்னு அய்யா சொன்னாரே! கடையில வேலை செய்திட்டு... கடேசில அரசியல்...?”

“ஆமாம்மா, அரசியல் நல்லதில்லையா? முழுநேர தொண்டனாயிட்டே-உங்க... மக புரவலர்கட்சிலதாங்க தொண்டனாயிருக்கிற. ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா?” எனறான்.

அவள் வாயடைத்துப் போனாள்.

பிறகு அவன் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்லி ஒரு பெண்ணை அழைத்து வந்தான். “காலிலவுழுந்து கும்பிடு, சுந்தரி. நம்ம தலைவர் முன்னிலையில்தான் கட்டிக்கிட்டேன்...” என்றான்.

“உங்க ஆசீர்வாதத்துல நல்லா இருக்கிறேன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுறேன்...” என்றான்.

அதற்குப் பிறகு கன்றை நசுக்கிவிட்டு, “ஸாரி” சொல்லும்போது தான் தட்டுப் பட்டிருக்கிறான். சலவை வேட்டி, வெள்ளைச் சட்டையில் இரத்தத் துளிகள் தெளித்த கோலத்துடன் தலைகுனிந்தவாறு, “தெரியாம நடந்திட்டதும்மா...” என்றான். “மன்னிச்சிடுங்க...” என்றவன் ரங்கனைப் பார்த்து, “அண்ணே, பார்க் பக்கம் மண்ணாங்கட்டி அண்ணே இருப்பாரு. அவுரக் கூட்டிட்டு வந்து, இதை அப்புறப்படுத்தி சுத்தம் செய்திடச் சொல்லுங்க. நா அவுசரமாப் போயிட்டு இருக்கிற. இல்லாட்டி...”

அவள் அவன் வேட்டி மடிப்பில் இருந்து அவனிடம் ரூபாய் நோட்டுக் கொடுப்பதைக் கண்டும் காணாதவளாகி, லட்சுமியையும், இந்த முதற்கன்றையும் ஓட்டிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/78&oldid=1049534" இலிருந்து மீள்விக்கப்பட்டது