பக்கம்:உத்தரகாண்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

லிருந்து, எழுபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் இந்நாள் வரை, இந்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாய், பார்வையாளராய், ஒர் எழுத்தாளராய் மலர்ந்த உணர்வுகளுடன் இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்த கொண்டிருக்கிறேன் என்ற தன்னுணர்வு ஏற்பட்டது. நான் அறிந்த பழகிய பலரும் என் மன அரங்கில் உயிர் பெற்றார்கள்.

இந்திய சுதந்தரப் போராட்டம் என்பது, உலகிலேயே முதன் முதலாக, அஹிம்சை நெறியில் மக்களை ஒன்று திரட்டி, அந்தப் பேருணர்வில் விளைந்த ஆற்றிலனாலேயே, அந்நிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த வரலாறாகும். அதைச் சாதித்தவர், இந்த இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராகிய காந்தியடிகள். அந்த 1947ம் ஆண்டு, ஆகஸ்ட்-14-15 நாள்ளிரவுக் கொண்டாட்டங்கள் நடந்த போது நான் சென்னையில் இருந்தேன். புதிய இளமை; புதிய விடிவெள்ளி. மக்களின் அந்த மகிழ்ச்சியை, அந்த ஆரவாரங்களை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, குடிசையில் இருந்து கோமான் வரையிலுமான மகிழ்ச்சிப் பிரதிபலிப்பை நானும் அநுபவித்தேன்.

இந்நாட்களில் கொண்டாட்டம் என்றால், குடி, கூத்து, விரசமான ஆட்டபாட்டங்கள் என்பது நடைமுறையாகி இருக்கிறது; குற்றமற்ற அந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை, ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே’ ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று’ பாடல் முழங்கும் சூழலை மறக்கவே இயலாது.

1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும் இந்நாள், முற்றிலும் வேறுபாட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி-சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/8&oldid=1049366" இலிருந்து மீள்விக்கப்பட்டது