பக்கம்:உத்தரகாண்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    87

கடைய மூடிட்டுப் போவான். “ஏமாமி, சாம்பாரா இது? பாலாத்துத் தண்ணின்னாலும் தாகம் அடங்கும்... கத்திரிக்காப் பொறியல் கசக்குது... நீ எப்ப ருசியா எல்லாம் போடப்போற?”ம்பான், கடங்காரன்.

“அப்ப இவர்தான் ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டே, ‘சுவாமி, நீங்க சாப்பாடு நல்லாயில்லன்னா, இங்கேயே ஏன் வரீங்க? பேசாம, அட்சயா ஓட்டல்ல சாப்பாட்ட வச்சிக்கிறது?...’ ம்பாரு. அந்தாள் சிரிச்சிட்டே இல்லே... என்னன்னாலும் ஐயர் மாமி சமையல் பண்ணிப்போடுதுன்னா... அது ஒரு... இது தானே?”ன்னாரு.

“அதென்ன சுவாமி, இது?..."ன்னு எந்திரிச்சி அவன் உருத்திராட்சத்தைப் புடிச்சி இழுத்தாரு. வெலவெலத்துப் போயிட்டான். அவர் வந்து சாப்பிட உக்காந்தார்னா ஒரு பய பேசமாட்டான்...

“ராத்திரில சாப்பாட்டுக்கு உக்காரமாட்டார். வந்து ரண்டு இட்டிலியோ, ஒரு சப்பாத்தியோ வாங்கிட்டுப் போவார். அங்கே எதிரே படுபாவிங்க ஒயின் கடையத் திறந்து வச்சிருப்பாங்க. கூட்டமா இருக்கும். ராத்திரி சாப்பாடுன்னு வர பாவி ஒருத்தன் பாட்டிலெடுத்திட்டே வந்தான். அந்தக் கடைய அங்கேந்து எடுக்கணும்னு முனிசி பாலிட்டிக்குப் போயி எழுதிக்குடுத்தாரு.. அவருக்கு மிளகு சீரகம் பூண்டு தட்டிப் போட்டு ரசம்னா புடிக்கும்... டிஃப்னோடு ரசமும் பாட்டில்ல ஊத்திக்குடுப்பேன். பிளாஸ்டிக் பை புடிக்காது. சின்ன சம்புடம் - அதை ஒரு துணிப்பையில் போட்டுட்டு போவார். நாய்க்கும் ரெண்டு இட்டிலி இருக்கும்.”

“அப்ப... பாட்டில்ல ரசம்தா குடுப்பீங்களாம்மா?”

“ஆமாம்...?... அவர் வரதுக்கு மின்ன சில தடியங்க பாட்டிலப் பதுக்கிட்டே வருவாங்க-ஒண்ணுக்கும் விளங்காத புருசனையும், ஸ்கூலில் படிக்கும் குழந்தைகளையும் காப்பாத்த நான் பிழைக்கனுமேம்மா? பாட்டில் கடக்கும் மூலையில்... அப்படி ஒண்ணைக் கழுவி, சின்னதா பட்டையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/89&oldid=1049554" இலிருந்து மீள்விக்கப்பட்டது