பக்கம்:உத்தரகாண்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

களைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்குநீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்பாடும் சூழலில் உருவாயிற்று.

காந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல், 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு, 3. நாணயமான வாணிபம், 4. ஒழுக்கம் தலையாய கல்வி, 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பினால் எய்தும் செல்வம், 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழுநெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நல்கும் உயிர்ச்சத்தை உறிஞ்சிவிடும் என்றார்.

இந்த நெறிமுறைகளில்- வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.

பொது உடமைச் சித்தாந்தம் ‘தனிமனித’ அடிப்படையில் உருவாகவில்லை. அது ஓர் இயக்கமாகவே செயல்படுத்தும் தத்துவமாகிறது.

ஆனால் தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே ‘சத்தியக் கிரகப்போர்’ செயல்படுத்தப்பட்டது.

வறுமையும், எழுத்தறியா அறியாமையும் பல்வேறு சமய கலாசாரங்களும் இருந்தாலும், ‘பாரத கலச்சாரம்’ என்ற பண்பாடு-இருந்தத் துணைக் கண்டத்து மக்களை ஓர் ஆலமரமாக, விழுதுகளாக, ஒன்றுபடுத்தித் தாங்கி நின்றது.

இந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள், நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல வாழ்வில் குரேதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/9&oldid=1049368" இலிருந்து மீள்விக்கப்பட்டது