பக்கம்:உத்தரகாண்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    95

பிழைச்சிக்கலாம்...” என்பான். அப்படியும் போகவில்லை. அந்த வளைவில்தான், மூன்று குழந்தைகளையும் அவளையும் விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். குடித்துவிட்டு இசைகேடாக விழுந்து மண்டையில் அடிபட்டுப் போனான்.

நேரு இறந்து போவதற்கு முன்புகூட அவரை எல்லோரும் வந்து கேட்டார்கள். சீனாவோடு போர் வந்தது. ராதாம்மாகூட வளையல்களைக் கழற்றித் தங்கம் கொடுத்தார்கள். தங்கத்துக்கு மாற்றுக் குறைந்தது. காங்கிரசுக்காரன், தமிழ்ப் பெண்ணின் ‘தாலியை’ப் பற்றி இழுப்பது போல் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டினார்கள்...

ஆனால் இது, நடந்த நாள் குடியரசு தினம். வித்யாலயத்துச் சுவர்களில் இந்தி ஒலிக, தமிழ் வால்க என்று எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு உள்ளே வந்து சுப்பய்யா, பராங்குசம் எல்லோரிடமும் வந்து சொன்னார். ‘இதைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை!’ என்று சுப்பய்யா, மையை எடுத்துக் கொண்டு போய்த் திருத்தினான். ‘ஒலிக’ன்னா, நேர் மாறாகப் பொருள்...” என்று சிரித்தது அவளுக்கு நினைவு இருக்கிறது.

கொடியேற்றிவிட்டு, வேறு பல பள்ளிக்கூடங்களில் அவர் கொடியேற்றிக் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போனார். அப்போது ராதாம்மா அங்கு இருந்தாள். குழந்தை ‘விக்ரம்’ மூணுநாலு வயசிருக்கும். பள்ளிக்கூட வளாகத்தில், பாட்டு, பேச்சு, நாடகம் என்று தொடங்கி நடந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் போலீசு வண்டியும் கூட்டமுமாக உள்ளே நுழைந்தது. அம்மாவும் சுசீலா டீச்சரும் திடுக்கிட்டு ஓடினார்கள். இந்தி கலவரம் அப்போதெல்லாம் அதிகமாகவே இருந்தது. இந்தி பிரசார சபாவில் நுழைந்து, புத்தகங்களை நாசம் செய்தது.

தீ வைத்து, உள்ளிருந்தவர் சட்டையைக் கிழித்தார்கள் என்றெல்லாம் செய்தி கேள்விப்பட்டார்கள். ஆனால் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/97&oldid=1049617" இலிருந்து மீள்விக்கப்பட்டது