பக்கம்:உத்தரகாண்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96   ✲   உத்தரகாண்டம்

இந்த அய்யாவுக்கே வரும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.

குருகுலம் வீடு, பள்ளிக் கொட்டகைகள், மரங்கள் ஆகிய சூழலில், தனியாக, பழைய கால மச்சுவீடாகத் தெரியும். முன்புறம் ஒரு பெரிய வேப்பமரம் கிளைகளை விரித்து நிழல் பரப்பும். வாயில் வராந்தாவின் குட்டைச்சுவரில் ராதாம்மா உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். வராந்தவைக் கடந்த பெரிய கூடத்தில்தான் தேசத்தலைவர்களின் படங்கள் இருந்தன. கீழே அமர்ந்து தான் பேசுவதோ, நூற்பதோ, பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதோ செய்வார்கள். அங்கே தான் அவரை வண்டியிலிருந்து இறங்கிக் கூட்டி வந்தார்கள்.

முதன் முதலில் உள்ளிருந்த அவள்தான் விரைந்து வநதாள்.

“தாயம்மா, பேசினில் தண்ணீர் கொண்டு வா!” என்று சொல்லி அம்மா, அவர் காயங்களைத் துடைக்கப் பஞ்சும் துண்டும் கொண்டு வந்தார். ஒரு சாய்மான் திண்டைக் கொடுத்து உட்கார வைத்தார்கள். கதர்ச் சட்டை தாராகக் கிழிந்து தொங்க, உள்ளே இரத்தக் காயம்... சமையல் செய்து கொண்டிருந்த ருக்குமணி, இவள் மருமகன் பாப்பு, பஞ்சமி புருசன்... அவனை ஏனோ பாப்பு என்று கூப்பிடுவார்கள். கந்தசாமி ‘எலக்ட்ரிக்’ வேலை தெரிந்தவன்.

எந்த தீபாலங்காரமும் ஒயர் இழுந்து அவன் செய்வான். அவன்தான் கூட்டத்தை விலக்கி, டாக்டர் வர வழி செய்து, மருந்து வாங்கி வந்து, உதவினான். அன்று அவன் குடியரசு நாளை முன்னிட்டு, கூடத்தில் இருந்த படங்களுக்கு ஸூரீயல் பல்ப் வேலையில் இருந்தான். ஸ்டூலில் அவன் நின்ற போதுதான் எதிர்பாராதது நடந்திருக்கிறது.

‘அய்யா, ஒரு ஈ குஞ்சுக்குக் கூடத் தீம்பு பண்ண மாட்டாரே? அவருக்கு இது எப்படி நடந்தது? இப்ப சுயராச்சிய ஆட்சிதான நடக்குது? ...” என்று புலம்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/98&oldid=1049618" இலிருந்து மீள்விக்கப்பட்டது