பக்கம்:உத்திராயணம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலா § {

நள்ளிரவில் இன்று பெளர்ணமி-கனவுள் தந்தி வாத்யத் தின் தேம்பல் கேட்டு விழித்துக்கொண்டேன். அல்லது விழித் துக்கொண்டேனா? மண்டை மயிர் விறைத்துக்கொண்டது. இடம் தாண்டி, காலம் தாண்டி, வையம் பூரா வியாபித்த ஒசையலைகளின் விதிர் விதிர்ப்பில்-இப்படித்தான் என்னால் விடுபிரி காண முடிகிறது-மிதந்து வந்த ஸாரங்கியின் ஸ்ருதி மீட்டலில், தினைவோட்டின் எதிரொலிப்பில், நான் உடனே அடையாளம் கண்டுகொண்ட குரலில், சொல்பாகு நேர்த்தியாகச் சுழன்றது.

-மனிதனுக்கு ஒரு வருடம் தேவர்க்கொரு நாள், தேவர்க்கொரு வருடம் பிரம்மனுக்கொரு நாள். இந்தக் கணி தத்தில் ஏணியின் உச்சிப்படி ஈசுவரனை அடையும்போது, காலம் எவ்வளவு பெரிய பிதற்றல்! ஏணியில், ஹே ராமா! உன்னிடம் எத்தனாம்படி?

காம்பவுண்டில் எங்கோ ஒரு தென்னை மட்டை விழுந்தது. மரத்தின் மூச்சேபோல் அந்த ஒசையில்தான் எவ்வளவு சோகம்!

-கல்லோ, உடலோ, தேன்கூட்டைப் பன்முறை பழிக் கும் மூளையின் லrோய லக்ஷ அறைக் கண்களோ அங்கு திக்குத் தப்பித் திரியும் ப்ரக்ஞைக்கு எல்லாமே சிறைதான். காத்திருக்கும் நேரம் அனைத்தும் சிறை நேரம்தான். விடுதலையும் ஒரு தோலுரிப்புத்தான். எத்தனை தோல் முழுச் சூன்யத்துக்கு உரிக்கனுமோ? முழுமை என்று ஒன்றே உண்டோ? ராமா!...

மறுநாள், கறுப்புத் தடவி ஒரு கடிதம் வந்தது. விடு தலை கிடைத்துவிட்டது போலும்!

-நிகழும் காளயுக்தி வருஷம்.

விழியை மறைத்தது. கண்ணாடியைத் தேடினேன். மூக்கில்தான் இருந்தது. இத்தனைக்கும் அங்கு தங்கினது ஒரு இரவுதான். அதற்கே இவ்வளவு சதையாட்டமா?