பக்கம்:உத்திராயணம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸர்ப்பம்

அக்காவுக்கு என்மேல் உசிர். அதை முதலில் சொல்லி யாகணும். ம்... ம்... ம்... அதைப்பற்றிச் சந்தேகமில்லை. சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டால் அடுத்த ஜன்மத் தில் புழுவாய்த்தான் பிறப்பேன். எதிர்வீட்டு எண்ணெய்ச் சேட்டியார் அவர் திண்ணையிலேயே கடை வைத் திருக் கிறார்-அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன், துரோகம் எண்ணறவா, பண்றவா எல்லாரும் புழுவாய்ப் பிறப்பா ளாம். பேச்சுவாக்கில் இதை அம்மாவிடம் சொன்னப்போ, அம்மா பக் குனு வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

'அடி அசடே!'"

அம்மா தையல் மெஷினை ஒட்டிக்கொண்டிருந்தாள். உருப்படியா ஒரு பாவாடை தைச்சு நாங்கள் அறியோம். ஆனால் மெஷின் என்னவோ மும்மரமா கொட கொடா கோட கொடா

  • என்னம்மா?"

அதுக்கு"ன்னு பிறந்தவனே

எதுக்கு?’’

  • சரி, விட்டுத்தள்ளு..."

அம்மாவே அப்படித்தான். பாதியிலேயே அவளுக்கு, அலுப்புத் தட்டிவிடும்.