பக்கம்:உத்திராயணம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 97

முக்கிண்டு முனகிண்டு கையில் காபியோடு அம்மா சமையலறையிலிருந்து வரா. அப்படி முக்கி முனகற வயசு மில்லே, உடம்புமில்லே. ஆனால் அது அம்மாவோட மேக் அப், "

பந்து சுவத்திலிருந்து எழும்பற பாதையில் அப்போ அம்மாதான் வந்தாளோ இல்லே தன் பாதை பிசகி பந்து அம்மாவை தேடிண்டு போச்சோ?

பந்து அம்மா கையிலிருந்து டம்ளரைப் பிடுங்கி தரை யில் டிங் டிங் டிங்’ தம்ளர் உருண்டோடித்து அக்கா அபிஷேக சுந்தரி:

இது எப்படி, ஏது, இசைகேடா-என்னைக் கேக்கா தீங்கோ,

ஆனால் அம்மா என்னைத்தான் கேட்டா? எப்படிக் கேட்டா? கையாலும் காலாலும்-ஆமா அம்மா என்னைக் காலால் உதைச்சா. முதுகிலே வேறே மொத்து மொத்துன்னு தகரக் கொட்டா மேலே மழையிறங்கிற மாதிரி, தனக்கு மூச்சு இறைக்கிற வரைக்கும் அடிச்சிட்டு, அம்மா அக்காவைக் கட்டிண்டு அழ ஆரம்பிச்சுட்டா.

எனக்கு அழுகை வரல்லே. என்னவோ திக்பிரமை, காலடியில் காப்பி சேறாய், குட்டையாய்த் தேங்கித்து. ஒரு இனுசு சேப்பா, சந்தனக் குழம்பாட்டம், பார்க்கவே ஆசையா, குடிக்கவே ஆசையா அவ்வளவுதான். எனக்கு மத்ததெல்லாம் மறந்துபோச்சு குப்புறப் படுத்துண்டு உறிஞ்ச ஆரம்பிச்சுட்டேன்.

எதிரே சுவத்தில் காலண்டரில் ஒரு புவி கரையோரம் யுதர்களிலிருந்து வெளிப்பட்டு முன்னங்காலில் குடல்

திறந்த மானை இடுக்கிண்டு-குளமா ஆறா தெரியல்லே

تم سحبسه سيه