பக்கம்:உத்திராயணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 லா, ச. ராமாமிருதம்

ஜலத்தை நாக்காலே நக்கி (என்ன நாக்குச் சிவப்பு: குடிச் சுண்டு என்னைப் பார்த்து உர்-உர்-உர்-மஞ்சள் கண்கள்ர் காத்தில்-காலண்டர் அசைவில் புலியும் அசைஞ்சுது, எங்க ளுக்கிடையில் திடீர்னு ஏதோ ஒரு உறவு, உன்னைப்போல் நானா? என்னைப்போல் நீயா? ஏதோ ஒத்துமை.

அம்மாவும் அக்காவும் அழக்கூட மறந்து என்னையே பார்த்துண்டிருக்கா அவா முகத்தில் ஒரு வெறுப்பு ஆச்சர்யம்.

பயம்?

என்னைக் கண்டு ஏன் பயப்படனும்?

நான் என்ன புலியா?

அவாளவாளுக்கு இஷ்டப்படி நிறைவேறாட்டால், அதுக்கும் பழிபோட ஏன் பிறர் தலையைத் தேடறா?

காப்பியையா தட்டிவிட்டா, கல்யாணத்தையேன்னா தட்டிவிட்டா பாவி!"

"அது ஒரு அபசகுனின்னு அப்பவே எனக்குத் தெரியும்'

குழந்தையை ஏண்டி குத்தம் சொல்றே?’’

குழந்தையாம்! குழந்தையைப் பாரு! இப்பவே குதி ராட்டம்: சப்பாத்திக் கிழங்குன்னா அப்படி ஒரு வளை வளைக்கிறது. இட்டுப் போட்டு தோளே விட்டுப்போறது. இப்படியே பெருத்துண்டு போனால் ஒருநாள், டொப்"னு: வெடிச்சுடுவேன்னு சொல்லியும் பார்த்தாச்சி கேட்டால் தானே?"

"அவள் என்ன செய்வாள்? நீ பண்றே, அவள் தின் கறாள். இதென்ன நியாயம் மடி நிறைய பாலை நிறுத் திண்டு கன்னுக்குட்டிக்கு வாய்ப்பூட்டு மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/108&oldid=544197" இலிருந்து மீள்விக்கப்பட்டது