பக்கம்:உத்திராயணம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 39

அம்மா அப்பாவை ஒரு மாதிரியாப் பாக்கறா, அப்பா தொண்டை யை கனைச்சுக்கறார். ரெண்டுபேரும் சிரிச்சுக் கறா, அவாளுக்குள்ளே என்ன ரஹஸ்யமோ? என்ன அர்த்தமோ? என்ன ஆனந்தமோ?

காப்பி கொட்டினதிலிருந்து அஞ்சு வருஷமா அலைஞ் சாறது: அக்காவுக்கு இன்னும் குதிரல்லே. பெரியவா ஒத்தரும் கண்ணை மூடிடல்லே, கொட்டாப்புளியாத்தான் வ, ளை . வராக

தோ பார் தங்கம்மா. இடிச்ச புளியா இருக்கேன்னு என்னை குத்தம் சொல்லிண்டு திரியாதே, எட்டுலே செவ்வாய், போறாத்துக்கு மூல நகrத்திரம் வேறே. ஆயிரம் கண்டிஷன்லே வரன் தேட வேண்டியிருக்கு. இன்னும் கேக்கப் போனா நீ என்ன ரம்பையாப் பெத்து வெச்சிருக்காயா?

இதன்னடியம்மா கொடுரம்? கூரையே தூத்தினா-'

உன் பழமொழியெல்லாம் மூட்டை கட்டி வை. யதார்த்தம்னு ஒண்னு இருக்கு. நீ ஒடி ஒளிஞ்சாலும் மூஞ்சியைப் பொத்திண்டாலும் குத்துக்கல்லாட்டம் அது உன் கண்ணுக்குள்ளேயே முளைச்சு நிக்கும் பாரு."

குழந்தைக்குக் கொஞ்சம் விளக்குப் பார்வைன்னா அதுக்கு இப்படிக் குத்தம் அடிக்கிறதா? அதிர்ஷ்டமாக்கும் தெரிஞ்சுக்கோங்கோ'

யார் வேண்டாம்னா? அவளுக்கு அதிர்ஷ்டம் வந்தால் தான் நமக்கு விடுதலை எங்கே விடுதலை? அப்புறம் இந்தக் கரடிக்குட்டி காத்துண்டிருக்கு. இதுக்கு எவன் லபிச்சிருக் கானோ?"

அப்பா அணைப்புள் நான் ஒடுங்கிக்கறேன். ஒளிஞ்சுக் கிறேன். என்னிக்கும் நான் அப்பா செல்லம்.