பக்கம்:உத்திராயணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உத்தராயணம்

அஜந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கூந்தல் கொடுப்பனை இருக்காது.

நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி, இறுகப் பிணைத்து எழுப்பிய கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது. ஸ்தூபிபோல் உச்சியில் ஒரு குமிழ் வேறே; சீப்பைத் தப்பிவிட்ட பிடரிச் சுருள்கள் நினைவில் குறுகுறுக்கின்றன.

பிறப்போடு வந்துவிட்டாற்போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது: ரவிக்கை பூணாது திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம், யார் இவள் முகம் பார்க்கு முன்-?

“வயதானவர் மொட்டை மாடியில் படுக்கக்கூடாதுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு கேக்கமாட்டேன்கறேள் அப்பா-!”

தோளைக் குலுக்கும் கையைத் தூக்கக் கலக்கத்தில் திமிரப் பார்க்கிறேன். தூக்கம் கலையவில்லை, கனவு கலைந்துவிட்டது:

“எழுத்திருங்கோ அப்பான்னா”

ഉ.. --1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/11&oldid=1143394" இலிருந்து மீள்விக்கப்பட்டது