பக்கம்:உத்திராயணம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露豊2 லா, ச, ராமாமிருதம்

கெட்டி மேளம் கொட்றது. சந்தனம் ஜமக்காளத்தில் சேறு பாயுது. பூவும் அrதையும் எங்கு பார்த்தாலும் வாரி இறையறது.

ஒருவழியா வந்துடுத்து கல்யாணம். பங்குனி மாசம் பத்தாந்தேதி பருப்புக் கல்யாணம் கூட்டம் தெரியறது. பந்திக்குப்பந்தி இட்ட எச்சில் காயுமுன் இலை மேல் இலை போட்டு-தரையில் காயாத ஒரு நசநசப்பு-எத்தனை ஊதுவத்தி ஏத் திவச்சு சாம்பிராணிப் புகை போட்டு என்ன? ஹாசம்

  • அம்மா, பாட்டி உங்கள் மடி ஆசாரம் எல்லாம் மலை ஏறிப்போச்சே."

அத்துரு இந்தக் கேள்வி கேக்கணும்னு காத்திருந் தையா? மூச்சு விட்றோமா பாருன்னு நாங்கள் இருக்கோம்! எல்லாம் பாவிகை தெளிச்சாச்சு-எல்லா தோஷத்துக்கும் நிவாரணி! அதைச் சொல்லு, எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருங்கோ எதையும் ஒத்துக்காதேங்கோ.

கலியான கூடத்தில் ஒதுக்கமா ஒரு உள்ளே மட்டும் ப்ர மாதமா அலங்கரிச்சாறது. மத்தியானம் மூணு மணிலேருந்து நடக்கிறது. புதுசாக் கட்டில், பீரோ, ஆள் உயரத்துக்குக் கண்ணாடி, மெத்தை, தலகாணி, பக்கத்திலே டீபாய், கட்டில சுத்திப் பூச்சரங்கள்-பாக்கறதுக்கே ஆசையா யிருக்கு-கலர் பல்பு- -

இங்கே என்ன நடக்கப்போறது?’’

கிழங்கள். நடுவயசுகள், சிறிசுகள் எல்லாம் ஒன்ணை ஒண்ணு பார்த்துண்டு திருட்டுத்தனமா சிரிச்சுக்கறதுகள்.

என்னவோ நடக்கப்போறது. உனக்கென்ன இப்போ அதைப்பத்தி?’’

காலால் பூமியை உதைக்கறேன். எனக்குத் தெரிஞ்சுக்

哑、炒 磁

கனு:ம