பக்கம்:உத்திராயணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளகர்ப்பம் 篮芷盈

தொடுத்தால் துளி ஆயிடும். உனக்கும் சேர்த்துத் தான்'

சூள் கொட்டினாள். எனக்குப் பழக்கமில்லை. ஆலெர்ஜி.”

  • உனக்கு வேணாட்டாப் படத்துக்குப் போட்டாப் போச்சு."

அத் திம்பேரும் நானும் ஹாலில் பூத்தொடுத்துக்கொண் டிருந்தோம். அத் திம்பேருக்குப் பூத்தொடுக்கத் தெரியும் போலிருக்கு. அக்கா சமையலறையில் வேலையாயிருந்தாள்.

எனக்கு ஒரு தங்கையிருந்தாள். உன் மாதிரிதான் இருப்பாள். மூளையில் கபம் தாக்கி மூணே நாளில் போயிட் டாள்," §

வீல்" என்று அலறல் கேட்டு, கைக்காரியத்தை அப் படியே போட்டுவிட்டு உள்ளே ஓடினோம்.

அக்காவுக்கு முகம் பூரா மூக்குக்கண்ணாடி பாழ்.ம்பூ! பாழ்ம்பூ! எட்டு மைலுக் கெட்ட நின்றுகொண்டு காஸ்ஸ்டவ் மேடையடியில் சுட்டிக் காண்பித்துக்கொண்டிருந்தாள்.

அங்கு ஏக அடைசல் இரண்டு மூன்று மண் அடுப்பு. வென்னிர்த்தவலை, செங்கோட்டை தோசைக்கல், ஒன்றுக் குள் ஒன்று மூன்று இலுப்பச் சட்டிகள். வெட்டுக்கத்தி, தோட்டக் கத்திரி. சிமிட்டி வாணலி-அறுந்துபோன தாம்புக்கயிறு-அடுக்கிண்டே போகலாம். இங்கு எங்கானும் புகுந்துகொண்டு எட்டு நாளைக்குச் சவால் விடலாம்.

இருந்தாலும் ஒவ்வொன்றாய் ஜாக்கிரதையாக எடுத்துப் பார்த்தோம்.

என்னடி காரியம் செஞ்சே ஜனனி படிச்சுப் படிச்சு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்! கையோடு கொல்லைக் கதவை அடைச்சுண்டு வரணும்னு: இங்கே ஒண்னு ஆள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/121&oldid=544210" இலிருந்து மீள்விக்கப்பட்டது