பக்கம்:உத்திராயணம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 லா ச. ராமாமிருதம்

இரவு பூரா துக்கம் ஏது? இந்தச் சமயத்தில் அம்மாவின் தற்குணங்கள் அனைத்தும்தான் சிந்தனையில் மேல் எழுந்தன. வெகுளி, ரொம்ப அஞ்ஞானம். சாப்பிட உட் கார்ந்த பின் யாரேனும் கேட்டால் அலுக்காமல், மோருஞ் சாதத்துக்குப் புளித்துவையல் அம்மியில் இழைப்பாள் பிறர் கஷ்டம் தாங்கமாட்டாள். அவளுக்கு இப்படி நேர்ந்துடுத்து பார்த்தையா? மண்டையில் அடிபட்டிருக்குமா? இல்லே இடுப்பு பிராக்சரா? முருகா, மை பேவரட் காட். ஹேவ் மெர்சி ஆன் அஸ்:

岑 ※ 宗

பொல பொலவெனப் பொழுது புலரும் வேளைக்கு ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து வீட்டுக்கெதிர் இறங்கினேன்.

அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.

என்னடி ஜனனி?’’

எனக்குச் சட்டென்று பதில் வரல்லே. உள்ளே ஏதேதோ மூட்டங்கள் சரசரவெனப் பிரிந்துகொண்டிருந்தன.

என்னடி திருதிருன்னு முழிக்கறே? எல்லாரும் செளக் இயம்தானே?"

என்னிடமிருந்து ஒரு சிரிப்புப் புறப்பட்டது. அது எனக்கே புதிதாய்த்தானிருந்தது .

இதுமாதிரிச் சிரிப்பு இதுவரை நான் சிரிச்சதில்லே. விட்டுவிட்டு அல்ல. ஒரு நீண்ட உருட்டுச் சிரிப்பு. மேளத்துள் சதங்கைபோல் அதன் ரகஸ்யத்வனி எனக்கு மட்டும் ஒலித்தது.