பக்கம்:உத்திராயணம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயாணம்

அவருக்கு ஒரு பழக்கம்; நல்லதோ, கெட்டதோதெரியாது. காலையில் விழிப்பு வந்ததும், பிறகும், நினைப்பு வந்தபோதெல்லாம் இடதுகையால் வலதுகை நாடியைப் பிடித்து இடது செவியோரம் கொண்டுபோய் ஒட்டுக் கேட்பார் ,

அவருடைய அத்தை நாடியில் நிபுணியாம், இந்தக் கேஸ், இன்றிலிருந்து ஒரு வருடம், ஒரு மாதம் ஒரு நாளில் காலாவதி என்று சொல்லுமளவுக்கு சொன்னபடியும் நடக்குமாம். ஆபத்தான மனுவி. ஆனால் நாடி பார்ப்ப துடன் சரி. அதில் கண்ட கோளாறுக்கு வைத்யம் பண்னவோ, பரிகாரம் சொல்லவோ தெரியாது. அதெல் லாம் செல்லக்கண்ணு பாடு. நாடி பார்க்கச் சொல்லிக் கொடுத்ததே செல்லக்கண்ணு பண்டிதன்தான். அத்தை, குருவுக்கு மிஞ்சின சிஷ்யை ஆகிவிட்டாள். அவனுக்குப் பிடிபடாத இடங்களுக்கு லகசிமி அம்மாளை அழைத்துக் செல்வான். அதெல்லாம் அம்சம், சொல்லிக்கொடுத்தோ படிச்சோ வர தில்லை. பாருங்க என் பாட்டனார் காலத்தி லிருந்து ஒலைச்சுவடி, நாடி சாஸ்திரப் புத்தகங்கள் பரண்லே அடுக்கி வெச்சிருக்கேன்; ப்ரயோசனம்?"

அத்தை மாதிரி தானும் நாடி பிடிக்கணும் என்று ஆசை. அத்தையிடம் கற்றுக்கொள்ளவும் முயன்றார். அவளும் ஏதேதோ சொல்வாள்: யானை நடை, கோழி நடை ,