பக்கம்:உத்திராயணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置星经 லா. ச. ராமாமிருதம்

குதிரை நடை"யென்று. போகப் போக அவளும் கட்ஸ்ா" அடிக்கிறாள் என்று தனக்கே தெரிந்தது. எல்லாம் தெரிந்து , கரை கண்டுவிட்டாலே அப்படித்தான். யானையாம், குதிரை யாம், கோழியாம்! அவருக்கு எல்லாம் ஒரே டக் டக் டக்" காய்த்தான் பட்டது. இருந்தாலும் தன் கையைத் தானே பிடித்துப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் மட்டும் நிலைத்து விட்டது.

டக் டக் டக்'

N0-இன்று டக் டக் டக் இல்லை. ஒன்று "கிர்ர்ர்-டக்' எஃகுச்சுருள் கழல முயல்வதுபோல. நடு நரம்பு பேசவே யில்லை. அடுத்ததில் வேகம் மின்னல் பறந்தது. தூக்கிவாரிப் போட்டது. வித்தை கடைசியாக கைக்கடங்கி வந்து விட்டதா? காத்திருந்த தவம் பலித்ததம்மா...ஆனால் தனித் தனியாக அவை என்ன பாஷை பேசுகின்றன? ஒன்று நிச்சயம். நல்லது பேசவில்லை.

பயத்தில் திடீரெனக் காலில் வந்தடைந்த பலவீனத்தில் டாக்டர் வீட்டுக்குப் போகும் தைரியம் விட்டது. அவர் க்ளினிக்கும் 9 மணிக்கு முன் திறக்காது. டாக்டர் 9 மணிக்கு. வரமாட்டார் என்பது அனுபவ உண்மை. அவர் வரும் வரை காலை எதிர் வெய்யிலுக்குத் தடுப்புக் கூட இல்லாமல் காத்திருக்க வேண்டும். டோக்கனில் தன் முறை வந்து உள்ளே போய் மீள்வதற்குள் 12.30. வேறு வழியில்லை. இன்று விலிட்டுக்கு அவிழ்த்து வைக்க வேண்டியதுதான். நல்லவேளை எதிரே ரொட்டிக் கடையில் டெலிபோன் இருக்கிறது. கடையும் திறந்தாச்சு,

வேலைக்காரக் குட்டியை இன்னும் காணோம். இன் றைக்கும் மட்டமா? தன்னை விட்டால் கதியில்லை என்று அவள் தெரிந்துகொண்டிருக்கிறாள். சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதில் அவள் தனி ஸ்பெஷல். அவள் வந்து தயவு பண்ணினால்தான் இன்றையச் சமையலுக்குப் பாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/126&oldid=544215" இலிருந்து மீள்விக்கப்பட்டது