பக்கம்:உத்திராயணம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயாணம் 董 23

இப்படியே இன்று போல் நாளை, நாளை போல் மறு நாள் என்று ஒரு நாளைப் போல் மறுநாள் மண்டையுள்ள வரை ஜலதோஷம்தான் வாழ்க்கை, கஸ்தூரிக்கு அலுத்துப் போனதில் ஆச்சரியமில்லை. அவன் என்னத்தை நினைத்துக் கொண்டு வந்தாளோ? நிச்சயமாய் அது அவளுக்கு என் னிடம் கிட்டவில்லை. அடிக்கடி சொல்வாள்: you are no adventure"-(இலக்கணத்தைத் தூக்கி உடைப்பில் போடு.) நான் என்ன உங்கள் மாதிரி வாத்தியார் மகளா? நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துகொண்டால் சரி. ஆனால் புரியவெச்சு என்ன பிரயோசனம்? நீங்கள் என்ன மாறப் போறேளா? எதைக் கேட்டாலும், இன்னிக்கு கரைச்சுட்டு நாளைக்கு என்ன செய்யறதுன்னு உங்கள் பல்லவியாப் போச்சு வாழ்க்கையைப் பின் எப்பத்தான் அனுபவிக்கிறது!

வயிற்றில் இப்படி வாரை இழுத்துக் கட்டறபோதே’’ இவ்வளவு இழுப்பாயிருக்கு, நீ என்னடான்னா சமுத்தி ரத்தைத் தாண்டனும் என்கிறாய்! உனக்கு என்ன வேண்டும்?

உங்களுக்கு என்றைக்குமே புரியாது. பாவம் கடைசி வரை அவள் குழந்தைதான். கன்னங்களில் பாலசடு மாற வில்லை. அவள் வந்த இடம், வளர்ந்த இடம் அப்படி. கையை நீட்டவேண்டும் உடனே மாங்காய் விழவேண்டும் மனப்பான்மை. அண்டாவைத் துர்க்கிச் செம்பில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு இன்னிக்கு இந்த நகை மேல் ஆசைப்பட்டேனா வாங்கு

முழுப்பணம் யாரு கேட்டுது? பங்காரு தல்வி ஒக்கப்பாதி லெக்காலு பெட்டினானு-ஸ்ந்தோஷங்கா தீஸ் கோனி வெள்ளண்டி மறுமாதம் பாக்கி கட்ட முடியாவிட் டால் வாங்கினவனிடமே வை. அவனே அடகும் பிடிக் கிறான். மீட்க முடியாமல் மூழ்கிப்போனால்-ஏதோ ஒரு மாதம்தானானாலும் பூட்டிண்டவரை சந்தோஷம்தானே!