பக்கம்:உத்திராயணம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 லா ச. ராமாமிருதம்

மாதம் அத்தனை State லாட்டரிக்கும் ஒதுக்கிவிடுவோம். போனால் நஷ்டம் ஒரு ரூபாய்தானே! விழுந்தால் விட்டுடு வேளா? காயிலுக்கு எழுதி வெச்சுடுவேளா?!’

ஆசைகள் நிராசையில் முடிவது வியப்பல்ல. ஆனால் இதுவே வாழும் தத்துவமாக... அவளுக்கு மட்டுமென்ன? வாழ்க்கை முறையில் அவளே வேறு தலைமுறையாகிவிட் டாள்... இதுவே வாழும் தத்துவமாக அமைந்துவிடுவது

ஆச்சரியமா இருந்தது.

ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு உண்மையா என் மேல் ஆசையிருந்தால், கணக்கில் நல்லதா எனக்கு ஒரு பட்டுப்புடவெ வாங்கித் தர முடியாதா? நீங்கள் தலையை மட்டும் அசையுங்கள், உங்களால் முடியாட்டா நான் ஏற் பாடு பண்றேன். நீங்கள் வேணும்னு வேஷம் போடறேள்."

பிச்சைக்காரனுக்கு அதிர்ஷ்டம் அடித்தால் அன்று அவனுக்கு இரண்டு ரூபாய்க்குப் பதிலாக அஞ்சு கிடைக்க லாம். ஐம்பதாயிரம் கிடைச்சுடுமா? சுக்ர திசையும் அவனவன் ஸ்திதிக்கு ஏற்றபடித்தான். ஆண்டவன் மனது வைத்தால் அவனால் ஆகாததல்ல என்பது வேறு விஷயம். அவன் மனது வைத்துத் தான் சந்திரமதியும் துடைப்ப மெடுத்துப் பெருக்கினாள் கஸ்தூரியிடம் என்ன சொல்ல முடியும்? சினிமா, சினிமா போன்ற கதைகள் அவாளைப் பாருங்கள், இவாளைப் பாருங்கள், அங்கே fridge, இங்கே டைனிங்டேபிள் என்ற எரிச்சல்கள் அடைத்துக் கொண் டிருக்கும். மண்டையுள் என் வார்த்தை, என் நிலைமை என்ன ஏறும்?

• ‘You are no advanture man!’"

சேகரை கருத்தரித்தது நிச்சயமானதும் அடேயப்பா! அவள் பண்ணின ரகளை இன்னும் மறக்கவில்லை. காளியாக மாறிவிட்டாள். என் மார்பில் படபடவென்று மாறிமாறி இருகைகளாலும் குத்துகிறாள். என்ன பலம்! நினைத்