பக்கம்:உத்திராயணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயாணம் 127

தாயுமான சுவாமிக்குத்தான் வெளிச்சம். திரும்பிப் பார்க் கையில்தான் இந்த அந்தகாரத்திலிருந்து எப்படி வெளி வந்தோம்? பயம் தோன்றுகிறது...(Telescopeஐத் திருப்பி வைத்துக்கொண்டு பார்த்தாற்போல்) செருப்பைக் காலி லிருந்து உதறும் சப்தம் எங்கிருந்தோ கேட்கிறது.

நாடியைப் பார்த்துக் கொள்கிறேன். இரண்டு Stimps down ஒன்று மட்டும் கிர்ர்ர். டக்.கிர்ர்ர்.டக் அதுவும் மெதுவாகிக் கொண்டிருக்கிறது. *

சேகர் வந்தாச்சு. இனிமேல் என்ன? Poor Sekart ஒரு முறை கண்ணால் பார்த்தாச்சு. ஒருமுறை எதுசாக்கிலேனும் அவனைத் தொடணும். இனிமேல் என்ன?

சேகர் என்னிடம் தந்தியை நீட்டுகிறான். சேகர் brooding type.. அதிகமாகப் பேசமாட்டான். நாங்கள் இருவரும் தனியாக இருப்பதற்கு இன்னும் சகஜமாயிருக்க லாம். என்னப்பா இன்னும் படுத் திண்டிருக்கேள்' என்று கூடக் கேட்கமாட்டான். எனக்குத் தெரியும் உண்மையில் அவனுக்குக் கேட்கத் தோன்றாது அவரவர் வந்தவழி,

“Report for Interview tomerrow 10 O' clock Bring all certts Ogls Scindia.' '

கப்பல் கம்பெனியிலிருந்து வந்திருக்கப்பா நம் கஷ்டம் விடிஞ்சது.'

என் உட்சுவரில் நான்கு கற்கள் இடிந்து விழுகின்றன. 6 . ஏனப்பா இவ்வளவு லேட்?" "கடன்காரன் நிறுத்தி வெச்சிண்டுட்டாம்பா. இரண்டு நாள் லீவு கேட்டு வாங்குவதற்குள் உன்பாடு என்பாடு ஆயிடுத்து. உண்மைக் காரணத்தையும் அவனிடம் சொல்ல முடிகிறதா? இருக்கிறவரை, செய்யறவரை செஞ்சிட்டுப் போன்னு கழுத்தையறுத்துட்டான். அப்பா நல்லவேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/137&oldid=544226" இலிருந்து மீள்விக்கப்பட்டது