பக்கம்:உத்திராயணம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயானம் H 39

சேகர் ஆஜானுபாகு (எனக்குத் தெரியாமல், அல்லது தெரியாது எனறு நினைத்துக்கொண்டு எங்கோ குத்துச் சண்டை கத்துக்கொள்கிறான். ஒரம்படுத்த அந்த மீசை அவனுக்கு நன்கு அமைந்திருக்கிறது.

சேகர் பேரழகு, சிந்தனை மண்டலம் புகைசூழ்ந்த பெரு விழிகள்: லேசாய்ச் சோகம் பிடித்த கண்கள். என்ன இருந் தாலும் ஆண் வளர்த்த குழந்தைதானே!

சேகர், நீ என் விசுவரூபம், தாழி உடைந்தால் என்ன? வெண்ணெய் எடுத்தாச்சு.

என் வாழ்க்கையில் சாதிக்க முடியாதனவின் நிறைவை உன்னில் கண்டு உன் மூலம் என் நிறைவைப் பெறுகிறேன். ஜன்ம சாபல்யமே அதுதானே! விட்ட இடத்திலிருந்து தொட்டு தீவட்டியை வாங்கிக்கொண்டு ஒடணும்.

சேகர், நீ என் சட்டையுரிப்பு. சேகர். நான் பச்சைப்புழு, நீ என் முதுகிலிருந்து வெடித்துப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி.

சேகர், நான் தோல்வியானாலும் நீ என் வெற்றி. சேகர், நீ எங்கிருந்தாலும் செளக்யமாயிருக்கணும். நீ உன் பிரயாணத்தில் கிளம்பிவிட்டால் இதோ நானும் ஒடம் ஏறப்போகிறேன்.

சேகர்-அங்கு இல்லை. frame வெறிச்சிட்டுவிட்டது. அறையில் புதிதாக ஒரு இருள் திரண்டுகொண்டிருக் கிறது. இது இரவின் இருள் அல்ல. எனக்கே தெரிகிறது, நாடியைப் பார்த்துக்கொள்கிறேன். அங்கு ஒன்றுமில்லை.

காத்திருக்கிறேன்.