பக்கம்:உத்திராயணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் # 3 }

சநான்தான்."

கையெழுத்துப் போடுங்க. No 36-’’

சிட்டாய்ப் பறந்துவிட்டான்.

கவரை உடைத்துப் பிரிப்பதற்குள், உடல்பூரா வெட வெட... தந்தியென்ன வீட்டுக்குத் தினப்பழக்கமா? தோளுக்குப் பின்னிருந்து ஒட்டுப்படிப்பதற்கென்றே தந்தாற். போல் தெரு விளக்கின் மெர்க்குரி வெளிச்சத்தில்,

“Regret Lt. Ramaprasad lost in action. Feared Dead.”

மாடிப்படி பிடிசுவர்மேல் ஸ்ேது சாய்ந்தான்.

டிக்கடைக்கு ஒட்டிச்செல்லும் ஒன்றிரண்டு எருமைகள் தெருவில் தள்ளு நடை போட்டுக்கொண்டு உறுமிக்கொண்டு சென்றன. -

தெருவில் அங்குமிங்குமாய் எட்ட எட்ட சாணி தெளிக்கும் சத்தம், இப்பவே கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சங்குகூட பிடிக்கவில்லை, இன்று வெள்ளிக் கிழமையுமதுவுமாய்-நேற்றே அம்மா. நாட்டுப்பெண்ணிடம் சொல் விக்கொண்டிருந்தாள்: எனக்கு நாளைக்குப் பகல் சாப்பாடு இங்கு இல்லை. சுமங்கவிப் பிரார்த்தனைக்கு அழைச்சிருக்கா ஏதோ பேர்கூட சொன்னாள். ஆபீஸ் கவலை, வீட்டுக்கவலை ஆயிரத்தில் அதுதான் அவனுக்கு ஞாபகமா? இதெல்லாம் பொம்மனாட்டிகள் விவகாரம், அதுவும் அம்மாவுக்கு இங்கே கல்யாணம்-அங்கே நிச்சய தாம்பூலம்-இங்கே பூச்சூட்டல், இந்தாத்துலே சீமந்தம்அரட்டைக்குப் போனவிடத்தில், முன்னே பின்னே கூடத் தெரியாது மூணாமாடியில் என் குழந்தைக்குத் தொட்டி லிடறேன். வெற்றிலைப்பாக்கு வாங்கிண்டு போங்களேன். நவராத்ரி பூஜை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/141&oldid=544230" இலிருந்து மீள்விக்கப்பட்டது