பக்கம்:உத்திராயணம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 லா, ச, ராமாமிருதம்

அம்மாவுக்கு வரும் அழைப்புக்கு ஒரு குட்டி ஆபீஸ்ே திறக்கலாம். சிலபேர் முகராசி அப்படி கீரைக்கூடைக் காரிக்கு அம்மா கைப் போணி வேணும்.

உனக்கோசரம் கீரை தினம் எத்தனை தரம் சமையல் பண்றது. கீரைப்பூச்சி வெச்சுடும்... பையன்கள் கரிச்சுக் கொட்றான்கள்.'

எனக்காச்சும் ஒரு கட்டு வாங்கிக்கோம்மா... ஒரே ஒரு கட்டு, மாட்டியா? கூடையை உன் கையாலே ஒரு தடவை தொடேன்...”*

சிலபேர் கைராசி முகராசி அப்படி:

இதற்கெல்லாம் மனுஷன், இருந்தும் கெடுத்தான்னு இன்னிக்கு வேளை பார்த்து அம்மா தலையில் கல்லைப் போடணுமா?

அப்பா மேல் எழுந்த சீற்றத்தில் ஸ்ேதுவுக்கு வயிற்றைக் குமட்டிற்று.

மாடியேறிப்போய், விடிந்ததும் விடியாததுமாய்அம்மா கொஞ்சம் லேட்டாய்த்தான் எழுந்திருப்பாள்அம்மாவை எழுப்பி இந்த சமாச்சாரத்தை அவளிடம் எப்படி உடைப்பேன்?

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்று சொல் கிறார்களே, வசனம் மெய்தானோ என்னவோ, அவனுக்கு இரண்டு ராத்ரியாகவே இருப்புக் கொள்ளவில்லை. படுக்கை யில் புரள்வதோடு சரி. தூக்கமில்லை. சுவரில், விடி விளக்கின் சிம்னியில், கூரை தூலங்களிடையே அப்பா முகம் தோன்றித் தோன்றி ம ைற ந் த து. இரண்டு நாளா என்னவோ மாதிரியிருக்கேளே! யார்மேல் நினைப்பு:

ஸ்ேது பல்லை நெறநெறவென்று கடித்தான்.